[X] Close
 

ஹாக்கி மட்டையை விரல் மீது நிறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவர் ‘ஹாட்ரிக்’ கின்னஸ் சாதனை 


guiness-record-holder

கின்னஸ் சாதனைக்கான சான்றுடன் கவுதம் நாராயணன் | ஹாக்கி மட்டையை ஒற்றை விரலில் நிறுத்தி ஹாட்ரிக் சாதனை - படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

  • kamadenu
  • Posted: 10 Jul, 2018 15:12 pm
  • அ+ அ-

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் ஹாக்கி மட்டையை விரலில் இருந்து கீழே விழாமல் ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் நிறுத்தி ஹாட்ரிக் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

சேலம் குகை பகுதியைச் சேர்ந்தவர் பி.கவுதம் நாராயணன்(23). இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். 

இவர் அடிப்படையில் கிரிக்கெட் வீரர். சிறு வயது முதல் பள்ளி அணியிலும், தற்போது மதுரை மருத்துவக் கல்லூரி, மருத்துவப் பல்கலைக்கழக அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். 

இது தவிர டென்னிஸ், ஹாக்கியையும் பொழுதுபோக்காக விளையாடுவார்.

இவர் முதல் முறையாக 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி ஒரே இடத்தில் நின்று 2 மணி நேரம் 16 நிமிடங்கள், 1 விநாடிகள் கிரிக்கெட் மட்டையில் பந்தை கீழே விழாமல் தட்டி கின்னஸ் சாதனை படைத்தார். 2016-ம் ஆண்டு 4 மணி நேரம் 20 நிமிடங்கள் ஒரே இடத்தில் நின்று டென்னிஸ் மட்டையில் பந்தை கீழே விழாமல் தட்டி கின்னஸ் சாதனை படைத்தார். 

கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரே இடத்தில் நின்று ஹாக்கி மட்டையை ஒற்றை விரலில் ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் 38 வினாடிகள் நிறுத்தி கின்னஸ் சாதனைக்கு அனுப்பினார். 

இதை கின்னஸ் நிறுவனம் தற்போது அங்கீகரித்து அவருக்கு சான்றிதழை அனுப்பி உள்ளது. இந்த சாதனையை தொடர்ந்து மூன்றாவது முறையாக (ஹாட்ரிக்) கவுதம் நாராயணன் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதற்காக கல்லூரி வளாகத்தில் டீன் மருதுபாண்டியன், கல்லூரி விளையாட்டு ஆலோசகர் டாக்டர் தாமோதரன் ஆகியோர் முன்னிலையில் இந்த சாதனையை கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நிகழ்த்திக் காட்டினார். 

என்ன சலுகைகள் கிடைக்கும்?

கவுதம் நாராயணன் மேலும் கூறியதாவது:

ஒவ்வொரு நாட்டிலும் ‘கின்னஸ்’ சாதனையாளர்களுக்கு சில சலுகைகள் உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி உட்பட பல நாடுகளில் அவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விழாக்களிலும், பொது வெளிகளிலும் விஐபி அந்தஸ்து கொடுக்கிறது.

அவர்களுக்கு சொந்தமாக நிறுவனங்கள் தொடங்குவதற்கு அந்நாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

இந்தியாவில் கின்னஸ் சாதனைக்கான தனி பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை. நான் செய்தது தனி மனித சாதனை. இதுவே குழுவாக நிகழ்த்தும்போது அந்த அங்கீகாரத்தை அவர்கள் விளம்பரத்திற்கும், அவர்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்தலாம், ’’ என்றார். 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close