[X] Close
 

சொட்டு நீரா சிறுநீரா?- எச்.ராஜாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்


hraja-trolled

  • பாரதி
  • Posted: 10 Jul, 2018 13:26 pm
  • அ+ அ-

சிறுநீர் பாசனத்திற்கு மத்திய அரசு ரூ.332 கோடி நிதி ஒதுக்கீடு என்று அமித்ஷா உரையை தமிழில் மொழிபெயர்த்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாதான் இணைய உலகின் ஹாட் டாபிக். 

எச்.ராஜா எப்போது பேசினாலும் சர்ச்சைதான். பல நேரங்களில் அவரது விமர்சனங்கள் பிரசுரிக்க முடியாத அளவுக்குக்கூட தாழ்ந்துவிடும். அப்படிப்பட்ட சர்ச்சைக்காரர் தனது வாயால் நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார்.

அமித் ஷா கூறிய மைக்ரோ இரிகேஷனை சரியாக மொழிபெயர்த்திருந்தால் நுண்நீர் பாசனம் என்றுதான் கூறியிருக்க வேண்டும்.

வாய்தவறி எச்.ராஜா பேச, இதுதான் வாய்ப்பு என்று நெட்டிசன்களும் அவரை கலாய்கலாய் என்று கலாய்த்துவருகின்றனர். ஏற்கெனவே சென்னைக்கு வந்த அமித் ஷாவை ட்விட்டராட்டிகள் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தார்கள். ஆனால், அந்த ஹேஷ்டேகை விஞ்சுமளவுக்கு ட்ரெண்டாகத் தொடங்கியது #HRaja. 

ட்விட்டர் கலாய்ப்புகள்.. 

நிதின்
H.Raja mind voice belike: ட்விட்டரில் சொல்லி இருந்தா அட்மின் சொன்னதா தப்பிச்சிடலாம். மேடையில் சொல்லிடோமே என்ன பண்றது.
Idea: பேசினது நான் இல்ல. அட்மின் என்ன மாதிரி ஆள்மாறாட்டம் பண்ணிட்டான்.#GobackAmitShah #HRaja

Robin Durai
#சிறுநீர்பாசனதிட்டம் Hashtag மூலம் எல்லோரையும் குதூகுலப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த #GobackAmitShah #HRaja விற்கும் மிக்க நன்றி.
 
@Karthikebk21
தமிழே சரியாக வரவில்லை, இதில் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரணுமாம்.. #bjp #bjpfails #hraja #TamilNadu #tnpolitics

கோமாளி
‏#HRaja Reaction Now: நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?... வாய்தவறி வார்த்தை சொன்னது தவறா?... #சிறுநீர்பாசனத்திட்டம்

நாச்சியாள் சுகந்தி:

'மைக்ரோ இரிகேஷன்' என்பதை மொழிபெயர்க்கத் தெரியாமல் சிறுநீர் பாசனம் என்று எச்.ராஜா சொன்னதை காமெடியாக்கும் நாம், அதற்கு 332 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தோம் என்று சொன்னார்களே... அந்த 332 கோடி ரூபாயும் விவசாயிகளுக்கு ஒழுங்கா போய் சேர்ந்ததா... அந்த திட்டம் பயன் கொடுத்ததா என்பதை கேட்க தவறும்போது நாம் தான் காமெடியன் மக்களே.

கணேஷ்குமார்.ஜி

சமீபத்தில் மத்திய அரசு வேளாண்மை துறையில் "one drop more crop" என ஒரு திட்டத்தை அறிவித்து அனைத்து மாநிலங்களுக்கும் பணம் ஒதுக்கியுள்ளது.
இதை தான் அமித்ஷா இந்தியில பேச அதை H.ராசா தப்பும் தவறுமாக தமிழில் மொழி பெயர்க்க....
மூக்கை பொத்திக் கொண்டது தமிழகம்.

விஷ்வா விஸ்வநாத்:

எச்சூஸ்மி, எனக்கு அர்ஜென்டா மைக்ரோ இரிகேஷன் வருது...டாய்லெட் எங்க இருக்கு?! 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close