[X] Close
 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GobackAmitShah


gobackamitshah-is-trending-in-twitter

  • பாரதி
  • Posted: 09 Jul, 2018 10:00 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று (திங்கள் கிழமை) சென்னை வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் சென்னை ட்ரெண்ட்ஸிலும் இந்திய ட்ரெண்ட்ஸிலும் #GobackAmitShah 3-வது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஏற்கெனவே கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது #GobackModi உலக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. கருப்புக் கொடிகளையும் கோபேக்மோடி பேனர்களையும் தவிர்க்க பிரதமர் மோடி சென்னை ஐஐடி-க்கு செல்ல ஆளுநர் மாளிகையிலிருந்து ஐஐடி வளாகத்துக்கு சிறப்புப் பாதை அமைக்கப்பட்டது. ஆனால், இத்தனை ஏற்பாடுகளையும் மீறி ஐஐடி மாணவர்கள் சிலர்  #GobackModi பதாகைகளைக் காட்டினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றி போராட்டங்கள் நடைபெற்றன. வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்போது அமித்ஷா தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் #GobackAmitShah ட்ரெண்ட் செய்யப்படுகிறது.

இந்த ஹேஷ்டேக் கீழ் சிலர் தமிகத்தில் உங்கள் பாட்ஷா பலிக்காது என்றெல்லாம் ட்வீட் செய்து வருகின்றனர்.

சென்னை பயணம் ஏன்?

2019 மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். இதற்காக நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத் தில் 5 வாக்குச் சாவடிகளை ஒரு சக்தி கேந்திரமாகவும் 6 சக்தி கேந்திரங்கள் மகா சக்தி கேந்திரமாகவும் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close