[X] Close

பல கட்டங்களில் நீட் நுழைவுத் தேர்வா?- வலுக்கும் கண்டனம்


neet-to-be-held-twice-a-year

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Jul, 2018 17:46 pm
  • அ+ அ-

இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை பல அமர்வாக நடத்துவதற்கு கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன. 

நீட் தேர்வால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஏற்கெனவே பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் கண்டனக் குரல்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை பல அமர்வாக நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீத்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில், "மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு  ஆண்டும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் இரண்டு முறை நடத்தப்படும்.ஒவ்வொரு முறையும் இத்தேர்வு எட்டுக்கும் மேற்பட்ட அமர்வுகளில் நடத்தப்படும்.
இரண்டு தேர்வுகளையுமே மாணவர்கள் எழுதலாம்.எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்ணை மாணவர்கள் பெறுகிறார்களோ அது மாணவர் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில்,பல்வேறு மாநிலத்தவர் பல்வேறு பாடத்திட்டங்களில் படித்து நீட் தேர்வை எழுதும் பொழுது அதை பல அமர்வுகளில் நடத்துவது முறைகேடுளுக்கும், பாரபட்சங்களுக்கும், குழப்பங்களுக்கும் வழிவகுக்கும்.

ஒரே சீரான அடிப்படையில் தேர்வுகள் அமையாது. வெவ்வேறு வினாத்தாள்கள் இடம் பெரும்.தேசிய அளவில் தரவரிசைப் பட்டியல் உருவாக்குவதில் பாராபட்சம் ஏற்படும். இது மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது.

எனவே, நீட் தேர்வை பல்வேறு அமர்வுகளில் நடத்தும் முடிவை கைவிட வேண்டும். மேலும் , நீட் நுழைவுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தேர்வு நடத்த செலவாகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, நீட் தேர்வுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும்.எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்களிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close