[X] Close

பாலகுமாரனின் மஹாபாரதம் பாகம்2 : இன்று நூல் வெளியீட்டு விழா


balakumaran-mahabharadham-2

  • kamadenu
  • Posted: 06 Jul, 2018 12:17 pm
  • அ+ அ-

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மஹாபாரதம் 2 நூல் வெளியீட்டு விழா, இன்று 6ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் நடக்கிறது.

எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மே மாதம் 15ம் தேதி மறைந்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதிலும் கூட, எழுதிக்கொண்டிருந்தார் பாலகுமாரன்.

இந்நிலையில் இன்று 6.7.18 வெள்ளிக்கிழமை, அவர் எழுதிய மஹாபாரதம் பாகம் 2 நூல், வெளியிடப்படுகிறது. சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி தெருவில் உள்ள வாணிமஹாலில் மாலை 5.30 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் வழங்கும் இந்த விழாவில், இல.கணேசன் எம்.பி., ஷெல்வீ, மரபின் மைந்தன் முத்தையா, சுமதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

ஸ்ரீகெளரி கணேஷ் நிகச்சியைத் தொகுத்து வழங்குகிறார். சூர்யா பாலகுமாரன் ஏற்புரை வழங்கிப் பேசுகிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close