[X] Close

சட்டப்பேரவையில் சுடச்சுட கமகம விவாதம்.. ஸ்டாலின் காட்டம்


when-tn-minister-turned-ambassador-for-piping-hot-crab-soup

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Jul, 2018 13:22 pm
  • அ+ அ-

தமிழக சட்டப்பேரவை பல வரலாற்று சிறப்புமிக்க விவாதங்களைக் கண்டிருக்கிறது. ஆனால், நேற்று (புதன்கிழமை) பேரவையில் கமகம விவாதம் நடந்திருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நண்டு சூப் குடிக்க அந்த வாசனையை அறிந்து திமுக உறுப்பினர் ஜி.அன்பழகம் பேரவையின் கவனதுக்கு கொண்டுவர அங்குதான் கமகம விவாதம் தொடங்கியது.

அவையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "நண்டு சூப்பை சுடச்சுட அருந்தினால் சளித் தொல்லை நீங்கும். இருமல் குணமாகும். இதேபோல், பால்சுறா மீன்களை பாலூட்டும் அன்னையர் உண்பது நல்லது. மத்தி மீன் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு குறையும்" என்று பேசினார். வேண்டுமென்றால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி அலுவலகத்தில் வைத்து நண்டு சூப் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் விவாதிக்கக்கூடிய விஷயமா இதுவென்று காட்டமாக கூறியவர் அமைச்சர் பேசும்போது அரங்கில் பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்த பேச்சுக்கு அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close