[X] Close

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி; எஜமானைக் காப்பாற்ற கம்பியைக் கடித்து இறந்த நாய்


a-faithful-dog

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jul, 2018 16:15 pm
  • அ+ அ-

நாய்.. இந்த ஜீவனுக்கு நன்றியைத் தாண்டி வேறொன்றும் தெரியாது என்பதற்கு சாட்சிதான் இந்த செய்தி. மதுரை மாவட்டம், அழகாபுரியைச் சேர்ந்தவர் விவசாயி மோக்ஸ்(65). இவருக்கு அருகில் விவசாயத் தோட்டம் ஒன்று உள்ளது.

பிராணிகளை வளர்ப்பதில் பிரியம் கொண்ட மோக்ஸ் பசுமாடு மற்றும் நாய் வளர்த்தார். பிள்ளைகளை போன்று மிகவும் பாசத்துடன் கவனித்து வந்தார். இதற்கென குறிப்பிட்ட நேரம் செலவிட்டு வந்தார். அவர் எங்கு சென்றாலும், வளர்ப்பு நாய் கூடவே செல்லும். தினமும் காலையில் பசுமாட்டை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வழக்கமாக கட்டுவார்.

இன்று அதிகாலையும் மோக்ஸ் தனது பசுமாட்டை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது, அவரது வளர்ப்பு நாயும் உடன் சென்றது. நேற்று இரவு அப்பகுதியில் பெய்த மழையால் அறுந்து கிடந்த மின்சார கம்பியை பசுமாடு மிதித்தது. இதில் சற்று நிலை குலைந்த பசுமாட்டை போக்ஸ் பிடித்து உள்ளார்.

சற்றும் எதிர்பாராத வகையில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மாடும் இறந்தது. கம்பியின் மேல் மோக்ஸ் விழுந்து கிடப்பதை அவரது நாய் பார்த்தது. உடனே தனது ஏஜமானை காப்பாற்ற துடித்து, அறுந்து தரையில் கிடந்த மின்வயரை பயமின்றி தன்னுடைய வாயால் கவ்வி இழுத்தது. இதில் நாய் மீதும் மின்சாரம் பாய்ந்து, கம்பியை கவ்வியவாறு நாய் உயிரிழந்து கிடந்தது.

தனது வளர்ப்பு பசுமாடு, நாய் ஆகியவற்றுடன் விவசாயி போக்ஸ் இறந்து கிடந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், ஊர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

- சன்னாசி

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close