[X] Close

பைக்குகளில் அசுர வேகத்தில் `பறக்கும்' இளைஞர்கள்: சாலைகளில் நடத்தும் சாகசத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 10:17 am
  • அ+ அ-

முன்பெல்லாம் வார விடுமுறை நாட்களில் நெடுந்தூர மலைப் பிரதேசங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பைக் ரைடிங் செல்வதுதான் இளைஞர்களுக்கு ஆவலாக இருந்தது. அதற்காகவே அவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரையிலான 400 சிசி வேகமுள்ள விலையுர்ந்த பைக்குகளை வாங்கிப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தற்போது பள்ளி, கல்லூரி செல்வதற்காகவே மாணவர்கள் இந்த விலையுர்ந்த பைக்குகளை வாங்குகிறார்கள். பைக்குகளில் செல்வதுதான் இந்த வயதில் மாணவர்களின் லட்சியமும், கனவுமாக இருக்கிறது. அதற்காக அவர்கள், ‘பள்ளி, கல்லூரிக்குப் போக மாட்டேன், தற்கொலை செய்து கொள்வேன்,’ என பெற்றோர்களை மிரட்டி, கட்டாயப்படுத்தி பைக்குகளை வாங்குகின்றனர்.

இந்த பைக்குகளின் பவர் புல் இன்ஜின் 3 இலக்க ஸ்பீடுக்குக் கொண்டு செல்லும். மதுரையில் இந்த பைக்குகளை ஓட்டுவதற்கான சாலைகளும், போக்குவரத்து ஒழுங்கு முறைகளும் இல்லை. இச்சூழ்நிலையில் இந்த பைக்கு களில் மாணவர்கள் சாலைகளில் மற்ற வாகன ஓட்டிகளை ஒட்டியபடி யும், அச்சுறுத்தியுயும் பறக்கிறார்கள். சில மாணவர்கள் முன் சக்கரத்தை உயர்த்தியபடி (வீலிங்) சாகசம் செய்து அதிவேகமாக ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் அவர்கள் மட்டுமல்லாது மற்ற வாகன ஓட்டிகளும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், சிறிய, பெரிய காயங்கள் ஏற்படுகின்றன. பலருக்கு கை, கால் முறிந்து அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடுகிறது.

இதுகுறித்து கல்லூரிப் பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘பெற்றோர் யாரும் விருப்பப் பட்டு பைக்குகளை வாங்கிக் கொடுப்பதில்லை. இந்த விஷயம், அந்த மாணவர்கள், அவர்கள் குடும்பத்தினர் சம்பந்தப் பட்ட விஷயம் என்பதால் கல்லூரி, பள்ளி நிர்வாகங்கள் தலையிடுவதில்லை. அப்படியே தலையிட்டாலும் மாணவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வரும் பைக்குளை கல்லூரிகள், பள்ளிகள் அருகே ஆங்காங்கே தெருக்கள், சந்துகளில் நிறுத்திவிட்டு வரு கின்றனர்.

ஓர் அளவுக்கு மேல் கல்லூரி நிர்வாகங்கள் தலையிட முடியவில்லை. மாணவர்கள் என்பதால் விபத்துகள் ஏற் படுத்தினாலும், ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டாலும் அவர்கள் மீது போலீஸாரும் நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்புகின்றனர். போலீஸார் வேகமாக ஓட்டும் ,மாணவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்புக் கவனம் எடுத்து லைசென்ஸ் இல்லாவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

இளம் வயதினர் மரணத்துக்கு காரணம் விபத்துகளே..!

மனநல மருத்துவர் ஆ.காட்சன் கூறுகையில், ‘‘இளம் வயது மரணங்கள் அதிகரிப்பதற்கு சாலை விபத்துகளும் தற்கொலைகளும் முக்கியக் காரணம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற விலையுர்ந்த பைக்குகளை வாங்கத் துடிக்கும் மாணவர்களை உளவியல் ரீதியாக எல்லாப் பரிசோதனையும் செய்து பார்க்க வேண்டும். முன்பு சைக்கிள் கிடைப்பதே கஷ்டம். பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ்களில்தான் மாணவர்கள் பயணம் செய்தனர்.

தற்போது இளைஞர்களைக் கவரக்கூடியதும், ஈர்க்கக் கூடியதுமான பைக்குகளை சந்தையில் அதிகளவு அறிமுகப் படுத்துகின்றனர். பைக்கில் கல்லூரிக்கு வராவிட்டால் நண்பர்கள் மத்தியில் மதிப்பு இல்லை என்று நினைக்கின்றனர். பைக்கில் கல்லூரிக்கு வருவதை பந்தாவாகவும், கெத்தாகவும் பார்க்கிறார்கள். மாணவர்கள் வழிதவறிப் போவதற்கு பைக்குகளும் ஒரு காரணமாகிறது.

இந்த மாணவர்கள் பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பில் இல்லாதபோது, அவர்கள் அடுத்தகட்டமாக போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர், ’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close