[X] Close

தமிழக அரசு சுதந்திரமாக செயல்படவில்லை: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 10:17 am
  • அ+ அ-

தமிழக அரசு சுதந்திரமாக செயல் படவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்தார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பதை கேட்டறிந்து, அவற்றை அமல்படுத்த வேண்டுமே தவிர அவர்களிடத்தில் திணிக்கக் கூடாது. மக்கள் எதிர்க்கும் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தக் கூடாது.

ஆணவப் படுகொலை தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இதைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அண்மைக் காலமாக மதவாதக் கட்சிகள் தலைதூக்கியுள்ளன. சாதிய மதவாதக் கட்சிகளின் காரணங்களால் ஆணவக் கொலைகள் அதிகரித்து வரு கின்றன.

தமிழக அரசு சுதந்திரமாக செயல்படவில்லை. மத்திய அரசின் கெடுபிடியின் கீழ் செயல்படுகிறது. மத்திய அரசுக்கு அனைத்து வகை யிலும் ஒத்துழைப்பு தர வேண்டிய இக்கட்டான நிலையில் தமிழக அரசு தவித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close