[X] Close

வரி வருவாயில் மாநில பங்கு 9% குறைப்பு மத்திய அரசை கண்டிக்க வேண்டும்: மாநில முதல்வர்களுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள்


9

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 10:11 am
  • அ+ அ-

திருச்சி தூய வளனார் கல்லூரியில் மத்திய அரசின் பட்ஜெட் - 2019 குறித்த பகுப்பாய்வு நிகழ்வு நேற்றிரவு நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2019-20-ம் ஆண்டுக் கான பட்ஜெட்டில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்க்க கமிட்டி அமைக்கப்படும் என கூறியுள் ளார். கமிட்டி அமைக்கப் படும் எனக் கூறுவதற்கு நிதிநிலை அறிக்கை எதற்கு?.

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. ஆனால், அவர்கள் மத்தியில் சேமிப்பை ஊக்குவிக்க இந்த பட்ஜெட்டில் எந்த சிறப்பம்சமும் இல்லை.

மத்திய அரசுக்கு கிடைக்கக் கூடிய வரி வருவாயில் 42 சதவீதத்தை மாநிலங்களுக்கு பிரித்துத் தர வேண்டும் என்பது நியதி. ஆனால், கடந்த 2018-19-ம் நிதியாண்டில் வெறும் 33 சதவீதம் மட்டும் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் மதிப்பீட்டின்படி 33 சதவீதம் வரை மட்டுமே பிரித்துக் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதன்மூலம் மாநில அரசுகளுக்கான பங்கு 9 சதவீதம் குறையப் போகிறது என்பது என் கணிப்பு. இக் கருத்தை மாநில முதல்வர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மத்திய அரசின் இந்த செயலுக்கு மாநில முதல்வர்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

நாட்டில் அடித்தட்டில் உள்ள 20 சதவீத மக்களை பட்ஜெட்டில் முற்றிலுமாக மறந்துவிட்டனர். அவர்களுக்கான எந்த சலுகையும், அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close