[X] Close

தமிழகத்தில் தபால் எழுத்தர் தேர்வை தமிழில் நடத்த வலியுறுத்தப்படும்: பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தகவல்


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 10:13 am
  • அ+ அ-

தபால் எழுத்தர் தேர்வு மற்ற மாநிலங்களில் பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டால், தமிழகத்திலும் தமிழில் நடத்த வலியுறுத்தப்படும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ராக்கியாபாளையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:கோவை, திருப்பூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறமுடியாமல் போனது கட்சி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டவுடன் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சென்னை மாதிரியான நகரங்களுக்கு, ரயில் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவது, அங்குள்ள சூழ்நிலையை பொதுமக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பாகஉள்ளது. நீர்நிலைகளில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழைக்கு முன்பாக ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். வட கிழக்கு மாநிலங்களில் தபால் எழுத்தர் தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டால், தமிழகத்திலும் தமிழ் மொழியில் தேர்வு நடத்திட வலியுறுத்தப்படும். மக்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம், என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close