[X] Close

அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை வகுப்பறைகள் கணினிமயமாக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


9-2

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 09:53 am
  • அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம், பாடிய நல்லூர் மற்றும் ஆரணி ஆண்கள்அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக, மாதவரம், பொன்னேரி சட்டப்பேர வைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 6,355 மாணவர்களுக்கு விலை யில்லா மடிக்கணினிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வழங் கினார்.

இவ்விழாவில், அவர் பேசியதாவது: ஏழை எளியவர்களின் நலனுக்காக நல்ல திட்டங்களை வகுத்துசெயல்படுத்தி வருகிறதுஇந்த அரசு. அந்த வகையில், பள்ளிசெல்லும் அனைத்து மாணவர்களும் கல்வி மற்றும் இதர திறன்களை மேம்படுத்துவதற்காக அரசுவிலையில்லா மடிக்கணினிகளைவழங்கி வருகிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தனியார்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் செயல்பட தமிழக அரசு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு இணைய வசதிகள் செய்து தரப்படும். 7,500 பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களாக மாற்றப்படும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ்களும் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளன. சீருடைகள் 1 முதல்5 வகுப்பு வரை ஒரு வண்ணமும்,6 முதல் 8 வரை ஒரு வண்ணமும்,9, 10-ம் வகுப்புகளுக்கு ஒரு வண்ணமும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு ஒரு வண்ணமும் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள125 மேல்நிலைப் பள்ளிகளில்விலையில்லா மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப் பட்டு உள்ளது. இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பயிலும் மொத்தம் 32,667 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் ரூ.33.97 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது.

இன்று பாடியநல்லூர்அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக, மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 15 பள்ளிகளின் 3,374 மாணவர்களுக்கும், ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குஉட்பட்ட 12 பள்ளிகளின்2,981 மாணவர்களுக்கும் என மொத்தம் 27 பள்ளிகளைச் சேர்ந்த 6,355 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் பற்றாக் குறை உள்ள பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில்மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில்ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆசிரியர் தேர்வு முடிந்தபின்காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.

செங்கோட்டையன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், எம்எல்ஏக்கள் பி.பலராமன், வி.அலெக்சாண்டர், ஆட்சியர் மகேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ப.ரவி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close