[X] Close

ஸ்ரீரங்கம் கோயில் புனரமைப்பு பணியை சிறப்பாக செய்து முடித்த வேணு சீனிவாசனுக்கு வெங்கய்ய நாயுடு பாராட்டு: மற்றவர்களும் இதுபோன்ற பணிகளில் ஈடுபட வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:48 am
  • அ+ அ-

ஸ்ரீரங்கம் கோயில் புனரமைப்புப் பணியை சிறப்பாக செய்து முடித்த அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசனுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்தார். வேணு சீனிவாசனை முன்னுதாரணமாக கொண்டு மற்ற வர்களும் நாட்டின் பாரம்பரிய கலாச்சார அடையாளங்கள், பழமையான கோயில்கள் உள் ளிட்ட புராதனச் சின்னங்களை புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயில்: எதிர்கால சந்ததிக் காக பாரம்பரியத்தை பாதுகாத்தல்’ (Sri Ranganathaswamy Temple, Srirangam: Preserving Antiquity for Posterity) என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா பல் கலைக்கழக அரங்கில் ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் ஜீயர் ஸ்ரீமத் ஸ்ரீவராக மஹாதேசிகன் சுவாமிகள், நாங்குநேரி ஸ்ரீ மதுரகவி வானமா மலை ஜீயர் சுவாமிகள் முன்னிலை யில் நேற்று நடந்தது. விழாவுக்கு ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவருமான வேணு சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

நூலை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதாகும். நமது மரபுகளின் அடையாளமாக கம்பீரமாக காட்சியளிக்கும் இக் கோயிலை புனரமைக்கும் பணி 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. ஸ்தபதிகள், பொறி யாளர்கள், கட்டிட வடிவமைப் பாளர்கள், வரலாற்று ஆசிரியர் கள், தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் உட்பட பல்வேறு துறை களைச் சேர்ந்த 1,330 பேர் இப் பணியில் ஈடுபட்டனர். 16 மாதங் களில் இப்பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இதைப் பாராட்டி, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இப் பணியை திறம்பட மேற்கொண்ட வேணு சீனிவாசன் உள்ளிட்டோ ருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது முன்னோர்களால் உரு வாக்கப்பட்ட இதுபோன்ற பாரம் பரிய கலாச்சார அடையாளங் களை பாதுகாக்க வேண்டும். வேணு சீனிவாசனை முன்னுதார ணமாகக் கொண்டு மற்றவர்களும் கோயில்கள் போன்ற புராதன சின்னங்களை புனரமைக்க முன் வர வேண்டும். எல்லாவற்றையும் அரசே செய்யட்டும் என்று இருக்காமல், மக்களும் இப்பணி யில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இது நமது கடமையாகும்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்காகவே பல்வேறு திட்டங்களை கோரினார். சென்னை மெட்ரோ ரயில் விரிவாக் கம் உட்பட அனைத்தையும் நிறை வேற்றிக் கொடுத்தேன்.

ஸ்ரீரங்கத்தை பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார். தமிழகத்தில் ஏற்கெனவே காஞ்சிபுரம், நாகப் பட்டினம் ஆகிய 2 நகரங்கள் பாரம்பரிய நகரங்களாக அறிவிக் கப்பட்டுவிட்டதால், அந்த ஆண்டு ஸ்ரீரங்கத்தை அறிவிக்க முடிய வில்லை.

இந்தியாவில் சிற்பக் கலைகள், இசை, நடனம், நாடகங்கள், புரா ணங்கள், தத்துவங்கள், கணிதம், புராதனச் சின்னங்கள் உள்ளிட்ட ஏராளமான கலை அம்சங்கள் உள்ளன. தொன்மை மாறாமல் அவற்றைப் புனரமைத்து, பாது காத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டியது நமது புனிதக் கடமையாகும். அதற்கு அரசும், மக்களும், தன்னார்வ அமைப்புகளும் முன்வர வேண் டும்.

வெளிநாடுகளில் தாய்மொழி யில் பேசுவதை பெருமையாகக் கருத வேண்டும். இதர மொழி கற்பதால் அறிவுத்திறன் மேம்படும். மொழி திணிப்புக் கூடாது. அதே நேரத்தில் பிற மொழி கற்க விரும்பு வோரை தடுக்கவோ, எதிர்க்கவோ கூடாது. ஆங்கிலம் கற்றால் சொர்க்கத்துக்கு போகலாம் என்று நினைக்கிறார்கள். இந்தியாவின் பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் (நான்) ஆகியோர் கான்வென்டில் படிக்கவில்லை. இருந்தாலும், நாட்டின் உயரிய பொறுப்புகளை வகிக்கிறோம்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

விழாவில், ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைச் சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். அமைச்சர்கள் டி.ஜெயக் குமார், ஆர்.பி.உதயகுமார், க.பாண் டியராஜன், ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close