[X] Close

தமிழில் தேர்வு நடத்தாததை எதிர்த்து வழக்கு; தபால்துறை தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் தடை


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:37 am
  • அ+ அ-

தபால்துறையில் மல்டி டாஸ்கிங் ஸ்டாப், போஸ்ட்மேன், மெயில் கார்டு, போஸ்டல் உதவியாளர், சார்டிங் உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழகத்தில் இன்று தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வுக்குத் தடை விதிக்கவும், தமிழிலும் தேர்வு நடத்தக்கோரியும், மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஆசிர்வாதம் உயர் நீதிமன்ற கிளையில் நேற்று அவசர மனு தாக்கல் செய்தார்.

அதில் தபால்துறையில் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வு தொடர்பாக, கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்ட போது, தேர்வு வினாத்தாள் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகளில் இருக்கும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு விரோதமாக இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது சட்டவிரோதமாகும். எனவே மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்து, தபால்துறை தேர்வு வினாத்தாளை தமிழில் வழங்க உத்தரவிட வேண்டும். இன்று நடைபெறும் தபால்துறை தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, ஆர். மகாதேவன் அமர்வு நேற்று இரவு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு இன்று தபால்துறை பணியிடங்களுக்கான தேர்வை நடத்திக்கொள்ளலாம். ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close