[X] Close

மியூசிக் அகாடமியில் 15, 16-ம் தேதிகளில் ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தின் 25-வது காட்சி மேடையேற்றம்


15-16-25

  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:38 am
  • அ+ அ-

சென்னை எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம், காஞ்சி மஹா பெரியவரின் வாழ்க்கை வரலாற்றை ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற பெயரில் கடந்த 2017முதல் நாடகமாக நடத்தி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடிக்கும் இந்த நாடகத்தில் மஹா பெரியவர் 13 வயது முதல் 100 வயது வரை 4 பருவங்களில் காட்சி தருகிறார்.

பெரியவர் பீடாதிபதியாக பதவியேற்றது முதல், கனகாபிஷேகம் வரை பல நிகழ்வுகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெரியவரின் யாத்திரை,பெரியவரின் ஒரு முழுநாள்ஆகியவை பாடலுடன் காட்சியாக்கப்பட்டுள்ளன.

எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன் எழுதி இயக்கியுள்ளார். காஞ்சி காமகோடி மடத்தின் ஆஸ்தான வித்வான் மாண்டலின் யு.ராஜேஷ் இசையமைத்துள்ளார். தோட்டா தரணி அரங்கம் அமைத்துள்ளார்.

சென்னை மியூசிக் அகாடமியில் 2017 அக்டோபரில் அரங்கேறிய இந்த நாடகம் டெல்லி, குர்காம், மும்பை, கோவை, சிங்கப்பூர், செகந்திராபாத், மறைமலை நகர்என பல இடங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில், இதன் 25-வது காட்சி, சென்னை மியூசிக் அகாடமியில் 15, 16 தேதிகளில் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, பெங்களூருவில் 21-ம்தேதி மேடையேறுகிறது.

‘‘காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஸ்வர்ண ஜெயந்தியோடு, நாடகத்தின் 25-வது காட்சியை இணைத்துநடத்துவது நிறைவாக இருக்கிறது. வரும் 15-ம் தேதி நாடகத்தின் 25-வது காட்சி தொடங்கும் முன்பு, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஸ்வர்ண ஜெயந்தியும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாடக உருவாக்கம் ஒரு தவம் என்றால், நாடகத்தைக் காண்பது ஒரு வரம். எல்லாம் மஹா பெரியவரின் அருள்’’ என்று நாடக இயக்குநர் இளங்கோ குமணன் கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close