[X] Close

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது: செப்.20 முதன்மை தேர்வு


20

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 15:06 pm
  • அ+ அ-

இந்தியா முழுதும் 10 லட்சம் பேர்வரை எழுதிய, இந்திய காவல்பணி, ஆட்சிப்பணி, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளில் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான  குடிமைப்பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகளை இந்தியா முழுதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதுவார்கள்.

இதில் முதல் நிலைத்தேர்வு (ப்ரிமிலினரி),  முதன்மை தேர்வு (mains), மற்றும் நேர்முக தேர்வு என்ற அடிப்படையில் ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஐபிஎஸ் படிப்பவர்கள் காவல்துறைக்கும், ஐஏஎஸ் படிப்பவர்கள் நிர்வாகப்பணிக்கும், ஐஎப்எஸ் படிப்பவர்கள் வெளியுறவுத்துறைக்கும், ஐஆர்எஸ் படிப்பவர்கள் வருமான வரித்துறைக்கும் தேர்வு செய்யப்படுவர்.

இதுத்தவிர 23-க்கும் மேற்பட்ட ஆட்சிப்பணி படிப்புகளுக்கும் இது ஒன்றே தேர்வு. ஏதாவது ஒரு பட்டப்படிப்பும், பயிற்சியும் இருக்கும் யாரும் தகுந்த வயது இருக்கும் பட்சத்தில் தேர்வு எழுதலாம். 10 லட்சம் பேர் எழுதும் இந்த தேர்வுகளில் வருடத்திற்கு சுமார் ஆயிரம்பேர் தேர்வாகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான முதல் நிலைத்தேர்வுகள் கடந்த ஜூன்.2-ம் தேதி நடைப்பெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியானது. இதில் தேர்வுப்பெற்றவர்கள் முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். இந்தநிலையில் முதல் நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. தேர்வு முடிவுகள் https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தக்கட்டமாக முதன்மை தேர்வுக்கு https://upsconline.nic.in/ என்ற மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (யு.பி.எஸ்.சி) ஆகஸ்டு 1-ம் தேதி முதல் 16-ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதன்மை தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் முதன்மை தேர்வு நடத்தப்பட உள்ளது. முதன்மை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தக்கட்டமாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close