[X] Close

தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 14:35 pm
  • அ+ அ-

வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாகவும் தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தகவல் வருமாறு:

“வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாகவும் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம்,தேனி, விருதுநகர், கடலூர், விழுப்புரம்,நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நேற்று வட தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், தென் தமிழகத்தின் சில இடங்களிலும் கனமழை பதிவாகி உள்ளது. இன்றும் பரவலாக மழைக்கான சாத்திய கூறுகள் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் 11 செ.மீ மழையும்,  திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 10 செ.மீ மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் பரூரில் 9 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஷும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஷும் வெப்பம் பதிவாக  வாய்ப்பு உள்ளது” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close