[X] Close

சென்னையில் கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது; தன்னார்வலர்கள் போராட்டம்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 13:33 pm
  • அ+ அ-

சென்னை, தரமணியில் உள்ள கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்யச் சென்ற அறப்போர் இயக்கத்தினரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இதற்கு எதிராக தன்னார்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போதிய மழையின்மையால் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. அனைத்து நீர்நிலைகளையும் தூர் வாரி, அவற்றில் அதிக அளவு தண்ணீர் சேமிக்கப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காக நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி, தூர் வாரும் பணியில் அரசு மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை, தரமணி அருகே உள்ள கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்ய அறப்போர் இயக்கம் என்னும் தன்னார்வ அமைப்பு முடிவெடுத்தது. அதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுமார் 7 மணியளவில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த 8 பேர் கல்லுக்குட்டை ஏரிக்குச் சென்றனர்.

ஆனால் ஏரியை ஆய்வுசெய்ய முன் அனுமதி வாங்கவேண்டும் என்றுகூறி காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வேளச்சேரி- தரமணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் மண்டபத்தின் முன்பு 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தினர் கூறும்போது, ''ஏரிக்குத் தண்ணீர் வரக்கூடிய வரத்துக் கால்வாய் மற்றும் ஏரி நிரம்பினால் தண்ணீர் வெளியேற கூடிய போக்கு கால்வாய் இரண்டும் எந்த நிலைமையில் இருக்கின்றன என்று பார்ப்பதுதான் ஆய்வின் நோக்கம். ஆய்வின் முடிவை அதற்குரிய தீர்வுகளுடன் அரசுக்கு அனுப்பி வைப்போம். ஆனால் இதற்கு காவல்துறையிடம் அனுமதி வாங்கவில்லை என்று ஆய்வுக்கு சென்றவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

காவல்துறை யாருக்காக வேலை செய்கிறது என்று தெரியவில்லை. ஏரியில் குப்பை போட தடை இல்லை. கட்டிடம் கட்டவோ, கழிவுநீரை விடவோ  தடை இல்லை. ஆனால் ஏரியை ஆய்வு செய்ய மட்டும் தடை, கைதா?'' என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close