[X] Close

ஒரு ரூபாய் பாக்கிக்காக 17 பவுன் அடமான நகையைத் திருப்பித்தர மறுக்கும் வங்கி!


for-a-default-of-re-1-bank-refuses-to-return-pledged-gold-to-customer

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Jul, 2018 12:08 pm
  • அ+ அ-

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியபோது ஒரு ரூபாய் பாக்கி வைத்துவிட்டதாகக் கூறி 138 கிராம் தங்க நகைகளை திருப்பித்தர மறுக்கும் வங்கிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் சாமான்யர் ஒருவர்.

கடுகு போன இடம் ஆராய்வர், பூசணி போன இடம் தெரியாது என்று ஒரு பழமொழி இருக்கிறது. ரூ.1000 கோடிக்கு மேல் வங்கிகளுக்கு கடன் வைத்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று நேக்கு காட்டும் 'தொழிலதிபர்களை' சுதந்திரமாக விட்டுவைத்திருக்கும் வங்கிகள் உள்ள நாட்டில் ஒரு ரூபாய் பாக்கி வைத்துவிட்டதாகக் கூறி 8 வருடங்களாக ஒருவரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது ஒரு வங்கி.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சி.குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த மனுவில், "காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பல்லாவரம் கிளையில் எனக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி இந்த வங்கியில் எனக்குச் சொந்தமான 131 கிராம் நகையை அடமானம் வைத்து ரூ.1.23 லட்சம் கடனாகப் பெற்றேன். 2011 மார்ச் 28-ல் கடனை வட்டியும் அசலுமாகத் திரும்பச் செலுத்தி எனது 131 கிராம் நகைகளை மீட்டேன். 2010 -11 இடைப்பட்ட காலகட்டத்தில் வேறு இரண்டு புதிய நகைக் கடன்களையும் பெற்றேன். 138 கிராம் நகைகளை அடகுவைத்து ரூ.1.65 லட்சம் கடனாகப் பெற்றேன். அந்த இரண்டு நகைக்கடன்களையும் அடைத்துவிட்டேன். இருந்தாலும் வங்கி என்னுடைய நகையைத் தர மறுக்கிறது. இரண்டு கடன்களிலும் ரூ.1 பாக்கி இருப்பதாகக் கூறுகிறது. அந்த பாக்கியை எத்தனையோ முறை திரும்பச் செலுத்த முயன்றும் அதை வங்கி வாங்க மறுக்கிறது. எனது நகைகள் வங்கியில் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எனக்கு வலுத்துள்ளாது. எனது நகையை திருப்பி அளிக்குமாறு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருக்கிறார்.

இந்த வழக்கில் 2 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து விளக்கம் கேட்டு சமர்ப்பிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close