[X] Close

உள்ளாட்சி தேர்தலையொட்டி தேமுதிக நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:26 am
  • அ+ அ-

உள்ளாட்சித் தேர்தல் நெருங்க வுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தேமுதிக நிர்வாகிகளை அழைத்து அக்கட்சியின் பொருளாளர் பிரே மலதா விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தது. இது, அக்கட்சியினர்மத்தியில் சோர்வையும், கவலை யையும் ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்தவும், கட்சிப் பணிகளை விரிவுபடுத்தவும் தேமுதிக தலைமை நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

தலைமை அறிவுறுத்தல்

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், முதல்கட்டமாக கடந்த மாதம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அந்தந்த மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, மாவட்ட பேரூராட்சி, நகராட்சி, ஒன்றியக் கிளை நிர்வாகிகளை வரவழைத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசித்து வரு கிறார்.

கட்சியை வலுப்படுத்த..

ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம்என இதுவரை கன்னியாகுமரி, தேனி, திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு முடிந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்க வுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மற்ற தேர்தல்களைவிட, உள்ளாட்சி தேர்தல் மூலம் கட்சியை வலுப்படுத்த முடியும் என நிர்வாகிகளிடம் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close