[X] Close

வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்ததாக சேலம் திமுக எம்பி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு


4

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:29 am
  • அ+ அ-

சேலம் திமுக எம்பி பார்த்திபன், அவரது உறவினர் உட்பட 4பேர் மீது வனத் துறைக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் மேச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்ட வனத் துறையின் சமூக காடுகள் திட்ட ஓமலூர் சரக வனச்சரகராக இருப்பவர் திருமுருகன்(56). இவர் சேலம்திமுக மக்களவை உறுப்பினர். பார்த்திபன், அவரது விவசாயத் தோட்ட காவலாளி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது மேட்டூரைஅடுத்த மேச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: ஓமலூர் சரக சமூக காடுகள் திட்ட வனவர் வடிவேலு உள்ளிட்ட வனத் துறையினர் மேச்சேரியை அடுத்த வேடன்கரடு வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் இரும்பு கம்பிகளால் வேலி போடப்பட்டிருந்ததைக் கண்டனர். அந்த இடத்தில் போடப்பட்டிருந்த வேலியில் தொடர்புக்கு என எழுதப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு வனத்துறையினர் தொடர்பு கொண்டனர்.

மிரட்டல்

மறுமுனையில், அந்த விவசாயத் தோட்ட காவலாளி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பழனிசாமி என்பவர், வேலி போடப்பட்டுள்ள இடம்சேலம் திமுக எம்பி பார்த்திபனுக்கு சொந்தமானது என்றும், வேலியைக் கடந்து உள்ளே வருவதற்கு எவரையும் அனுமதிக்க முடியாது என்றும் மிரட்டியுள்ளார். இதையடுத்து வனத் துறையினர் ரோந்துப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமலும், வனத்துறைக்கு சொந்தமான இடத்துக்குள் நுழைய முடியாமலும் போனது. வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் வேலி போட்டதுடன், அந்த நிலத்தில் இருந்த அரியவகை மரங்கள் மற்றும் பாறைகளை வெட்டி சேதப்படுத்தி தார் சாலை அமைக்கப்பட்டுஇருந்ததும் தெரியவந்தது. எனவே, வனத் துறை நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் 18-ம் தேதி புகார் தெரிவித்தார்.

4 பிரிவுகளில் வழக்கு

இதனிடையே, வனத் துறையினரின் புகார் குறித்து விசாரித்தமேச்சேரி போலீஸார் வனத்துறையின் நிலத்தை ஆக்கிரமித்தது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டியது உட்பட 4 பிரிவுகளின்கீழ் தோட்ட காவலாளி பழனிசாமி, எம்பி பார்த்திபன், அவரது உறவினர்கள் அசோக்குமார், அனந்தபத்மநாபன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close