[X] Close

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் 6 பேர் சிறைபிடிப்பு


6

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:27 am
  • அ+ அ-

தமிழக நாட்டுப் படகு மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்த சங்கர், நாகூர், கிரசைன், ராஜூ , சித்தி, பாலமுருகன் ஆகிய 6 மீனவர்கள் நாட்டுப்படகில் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.

நேற்று அதிகாலை கச்சத்தீவு கடற்பகுதியில் இந்திய கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீசிய சூறாவளிக் காற்றால் மீனவர்களின் கட்டுப்பாட்டை இழந்த நாட்டுப்படகு, இலங்கைக் கடல் பகுதிக்குள் சென்றது.

இந்நிலையில், கச்சத்தீவு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் நாட்டுப்படகைக் கைப்பற்றி மீனவர்கள் 6 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு விசாரணைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

6 மீனவர்கள் மீதும் இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டிநுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கு தண்டனைவிதிக்கும் புதிய சட்டத்தின்கீழ்வழக்குப் பதிவு செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன்,ஜூலை 26 வரை அவர்களைநீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மீனவர்6 பேரும் யாழ்ப்பாணம் சிறையில்அடைக்கப்பட்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close