[X] Close

தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்; கோவையில் ரூ.200 கோடியில் தொழில்நுட்ப வளாகம்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


634-200

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:21 am
  • அ+ அ-

தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய தூத்துக்குடி மாவட்டம் முல்லக்காடு பகுதியில் ரூ.634 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கோவையில் ரூ.200 கோடியில் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்றுமுதல்வர் பழனிசாமி அறிவித்துள் ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன்கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

உலகெங்கும் உள்ள தமிழர்கள், தமிழ்ச் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி முதலீட்டு தூதுவர்களை உருவாக்கவும், தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘யாதும் ஊரே’ என்ற தனி சிறப்புப் பிரிவு மற்றும் இணையதளம் ரூ.60 லட்சத்தில் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் முதலீடு செய்யமுன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அடையாளம் காணவும்,அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கவும் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, சீனா, தைவான், பிரான்ஸ், இஸ்ரேல், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கென தனித்தனியாக சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்படும்.

தொழில் வளர் தமிழகம்டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பிரிவு தொடங்கப்படும். ‘தொழில் வளர்தமிழகம்’ என்ற பெயரில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஆண்டுதோறும் ரூ.10 கோடியில் கூட்டங் கள், கருத்தரங்குகள், இணையவழி பரப்புரைகள் நடத்தப்படும்.

தொழில் முதலீட்டாளர்களின் தேவைக்கு 20 ஏக்கர் அல்லது அதற்கு மேலாக நிலம் அளிக்கவிரும்பும் தனியார் நில உரிமையாளர்களையும், தொழில்முனைவோர்களையும் இணைக்க ரூ.1 கோடியில் இணையதளம் தொடங்கப்படும். ‘தொழில் தோழன்’ என்ற தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை ரூ.50 லட்சத்தில் ஏற்படுத்தப்படும்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையைப்பூர்த்தி செய்ய முல்லக்காடு கிராமப்பகுதியில் ரூ.634 கோடியில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக் கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் – வடகால், ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழிற்கூட கட்டிடங்கள் ரூ.50 கோடியில் கட்டப்படும். வல்லம் – வடகால் சிப்காட், ராணிப்பேட்டை தொழிற் பூங்காக்களில் ரூ. 50 கோடியில் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.40 கோடியில் கருத்தரங்க கூடங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் வணிக வசதிகள் மையம் அமைக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களையும் தொழில் மயமாக்க ஏதுவாக குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் வைத்துள்ள தனியார் நில உரிமையாளர் களுடன் இணைந்து கூட்டாண்மை முறையில் தொழிற் பூங்காக்களை சிப்காட் நிறுவனம் அமைக்கும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் 3 சதவீத வட்டி மானியம் 6 சதவீதமாக உயர்த்தப்படும். இதனால் ஆண்டுதோறும் புதிதாக 400 குறு, சிறு நிறுவனங்கள் தொடங்கவும், 1,200 நிறுவனங்களை விரிவுபடுத்தவும், 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கவும் வழி ஏற்படும். இதற்கான கூடுதல் மானியத் தொகை ரூ.33 கோடியை ஆண்டுதோறும் தமிழக அரசே ஏற்கும்.

கோவையில் 9 ஏக்கர் பரப்பளவில் 5 லட்சம் சதுர அடியில் ரூ.200 கோடியில் கூடுதலாக ஒருதொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் வான்வெளி மற்றும் பாதுகாப்புப் பூங்காவில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்புமையம் 1 லட்சம் சதுர அடியில் சுமார் ரூ.100 கோடியில் நிறுவப் படும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 25 சதவீத இயந்திர தளவாட மானியத்துக்கான உச்சவரம்பு ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரும் பாக்கம், நாகை மாவட்டம் செம்போடை ஆகிய இடங்களில் ரூ.26 கோடியில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். அம்பத்தூர், செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், பெரம்பலூர், கோவை, சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 11 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நீண்டகால, குறுகியகால புதிய தொழிற் பிரிவுகள் ரூ.44 கோடியே 19 லட்சத்தில் தொடங்கப்படும். ரூ.64 கோடியில் தங்கும் விடுதிகள்அரசு தொழிற்பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சி முடித்து செல்லும் 10 ஆயிரம்பேருக்கு அவரவர் தொழிற்பிரிவுக்கு ஏற்ப ரூ.7 கோடியே 50 லட்சத்தில் கருவித் தொகுப்புகள் வழங்கப்படும். சிவகங்கை, நாமக்கல், காரைக்குடி, திண்டுக்கல், தூத்துக்குடி, சேலம், மதுரை, தருமபுரி, புதுக்கோட்டை, புள்ளம்பாடி, நாகலாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 12 தொழிற்பயிற்சி நிலை யங்களில் உணவுடன் கூடிய தங்கும் விடுதிகள் ரூ.64 கோடியே 41 லட்சத்தில் அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close