[X] Close

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு தொடங்கியது


1

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:22 am
  • அ+ அ-

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள் ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத்தேர்வு சென் னையில் நேற்று தொடங்கியது.

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய பதவிகளில் 181 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத்தேர்வு மார்ச் 3-ம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய அத்தேர்வை 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.

தேர்வுமுடிவுகள் ஏப்ரல் 3-ம் தேதி வெளியிடப்பட்டன. ‘‘ஒரு காலியிடத் துக்கு 50 பேர்’’ என்ற விகிதாச் சார அடிப்படையில் அடுத்த கட்ட தேர்வான முதன்மைத் தேர்வுக்கு மொத்தம் 9,441 பேர் தேர்வுசெய்யப்பட்டனர்.

ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களும் அதில் இடம்பெற் றனர். முதன்மைத் தேர்வு ஜூலை 12 முதல் 14-ம் தேதி வரை 3 நாட்கள் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, குரூப்-1 முதன்மை தேர்வு சென்னை யில் நேற்று தொடங்கியது.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் 95 தேர்வுக்கூடங்களில் நடைபெற்ற இத்தேர்வை 9 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். முதல் நாள் பொதுஅறிவு முதல் தாள் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. அதில், நவீன வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம், இந்தியா மற்றும் தமிழகத்தில் நிலவும் சமூக பிரச்சினைகள், பொது விழிப்புத்திறன் மற்றும் நுண்ணறிவு ஆகிய 3 பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றன.

முதல்தாள் எளிது

முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக பெரும்பாலான தேர் வர்கள் தெரிவித்தனர். 2-வது நாளான இன்று பொது அறிவு 2-ஆம் தாள் தேர்வும், நாளை (ஞாயிற் றுக்கிழமை) பொது அறிவு 3-ம் தாள் தேர்வும் நடைபெறும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 250 மதிப்பெண் வீதம் முதன்மை தேர்வுக்கு மொத் தம் 750 மதிப்பெண். இதில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கு 100 மதிப்பெண். இறுதியாக, முதன் மைத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close