[X] Close

வார்டு மறுவரையறை பணி முடிந்ததும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி உறுதி


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:24 am
  • அ+ அ-

வார்டு மறுவரையறை பணி முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல்நடத்தப்படும் என்று சட்டப்பேரவை யில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை,கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், உத்திரமேரூர் தொகுதிஉறுப்பினர் கு.சுந்தர் (திமுக) பேசும்போது, “ஆவடி பெருநகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி யிருப்பதை வரவேற்கிறேன். இதேபோல், தாம்பரம் பெருநகராட்சி யையும் மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

அதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்துப் பேசும்போது, “உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. வார்டு மறுவரையறை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்” என்றார்.

இந்த விவாதத்தின்போது உறுப்பினர்கள் ஏ.பி.சக்திவேல், விஜயகுமார் (அதிமுக), சரவணகுமார் (திமுக) ஆகியோரும் பங்கேற்று பேசினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close