[X] Close

காமன்வெல்த் பளு தூக்குதலில் புதுக்கோட்டை எஸ்.ஐ.க்கு தங்கம்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:15 am
  • அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்தவர் பி.அனுராதா. இவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 87 கிலோ உடல் எடைப் பிரிவில் ‘ஸ்னாச்' முறையில் 100 கிலோ, ‘கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 121 கிலோ என மொத்தம் 221 எடை தூக்கி நேற்று தங்கப் பதக்கம் வென்றார்.

பளு தூக்கும் போட்டியில் தொடக்க காலத்தில் தமிழகத்தில் பயிற்சி பெற்ற அனுராதா, பின்னர் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் சிறப்பு பயிற்சியை பெற்றதாகக் கூறப்படுகிறது.

இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனுராதாவுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரி முன்னாள் மாணவி என்ற அடிப்படையில் அக்கல்லூரி மாணவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2009 காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியிலும் அனுராதா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close