[X] Close

ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை கொண்டுவர அரசு உதவி செய்யவில்லை: ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:18 am
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை இந்தியா கொண்டுவர அரசு உதவ வில்லை என ஐ.ஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.

பழநியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜா ராம் நேற்று இரவு செய்தி யாளர்களிடம் கூறியதாவது: திருச்சி ராணிமங்கம்மாள் அரசு அருங்காட்சியகத்தில் இருந்து 31 சிலைகள் காணா மல் போயின. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி. இது குறித்து இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு 21 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய ராம்குமார் கிருஷ்ணன் என்பவர் நேபாள எல்லையில் உத்தரபிரதேச மாநிலம் சோனாலி என்ற இடத்தில் உள்ள இமிக் கிரேஷன் செக்போஸ்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்தப்படும் விசா ரணையில் மீதமுள்ள சிலை களை மீட்க வாய்ப்புள்ளது. லுக்அவுட் நோட்டீஸ் மூலம் இதுவரை குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் என்று கூறினார்.

தொடர்ந்து, ஐ.ஜி பொன் மாணிக்கவேல் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கல்லிடைக்குறிச்சி குல சேகரனுடை அறம்வளர்த்த நாயகி கோயிலில் 36 ஆண்டு களுக்கு முன்பு கடத்தப்பட்ட மிகப்பழமையான நடராஜர் சிலையை மீட்பதில் அரசு அலட்சியமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா சிட்னி அருங் காட்சியகத்தில் இந்த சிலை உள்ளது.

ரூ.30 கோடிக்கு இந்த சிலை விற்கப்பட்டுள்ளது. இதை தர ஆஸ்திரேலிய அரசு தயாராக இருந்தும், அதை இந்தியா கொண்டு வருவதில் அரசு அக்கறை செலுத்தவில்லை. சிலை கடத் தல் தடுப்பு பிரிவில் உள்ள அதிகாரிகள் அவரவர் சொந்தப் பணத்தை செல விட்டு பணி செய்துவருகின்ற னர் என்று கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close