[X] Close

மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு பேசும் மொழியிலேயே கேள்வித்தாள்கள்: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:10 am
  • அ+ அ-

மொழி சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு அவர்கள் பேசும் மொழியிலேயே கேள்வித்தாள்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வேளாண் துறை மானிய கோரிக்கை மீது தளி தொகுதி திமுக உறுப்பினர் பிரகாஷ் பேசினார்.

மொழிபெயர்ப்பாளர் இல்லை

தொகுதி கோரிக்கை தொடர் பாக தமிழில் பேசிக் கொண் டிருந்த அவர், தொகுதியில் உள்ள மொழிச்சிறுபான்மை மாணவர் கள் தொடர்பான கோரிக்கை குறித்து பேசும்போது, தெலுங்கில் பேசினார். அப்போது குறுக்கிட்ட பேரவைத்தலைவர், ‘‘நீங்கள் பேசு வதை முன்கூட்டியே என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். தற் போது இங்கு மொழி பெயர்ப் பாளர் இல்லை. நீங்கள் கூறுவது புரியவில்லை. இதை பதிவு செய்யவும் முடியாது’’ என்றார்.

இதையடுத்து தமிழில் பேசிய பிரகாஷ், ‘‘பல மொழி பேசும் மாணவர்கள், 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் போது அந்தந்த மொழி களில் கேள்வித்தாள் இருக்க வேண் டும். அந்த மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,‘‘பிற மொழி சிறுபான்மை மாணவர் களுக்கு அவர்கள் பேசும் மொழி யிலேயே கேள்வித்தாள்கள் அளிக் கப்படுகின்றன. சில மாணவர்கள் இதற்கான தகவலை முன்கூட் டியே தெரிவிக்காமல் இருப்பதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. தங் கள் மொழி குறித்து தகவல் தெரி வித்தால் அவர்களுக்கு கேள்வித் தாள்கள் அந்த மொழியிலேயே வழங்கப்படும்’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close