[X] Close

தமிழகம், புதுவையில் நாளை கனமழை வாய்ப்பு


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:11 am
  • அ+ அ-

தமிழகம், புதுவையில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தின் உள் பகுதி முதல், தென்னிந்திய பகுதிகள் முழுவதும் நிலப்பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. அதன் காரணமாக தமிழக பகுதிகளில் வெப்ப சலன மழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அதனால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை (14-ம் தேதி) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் 3 செமீ, கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை, வேலூர் மாவட்டம் மேல் ஆலத்தூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close