[X] Close

தாம்பரம் தடத்தில் பராமரிப்பு பணியால் 29 மின்சார ரயில்களின் சேவை ரத்து


29

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:14 am
  • அ+ அ-

சென்னை எழும்பூர் - பல்லாவரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நாளை (14ம் தேதி) நடக்கவுள்ளதால் இந்த தடத்தில் மொத்தம் 29 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40 மதியம் 12, 12.10, 12.20, 12.40,1.15, 1.30, 2, 2.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்ல வேண்டிய மின்சாரரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல், தாம்பரத்தில் இருந்துகாலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35 மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, மாலை 3, 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை 11, 11.50, மதியம் 12.30, 1, 1.45, 2.15, 2.45 மணி ரயில்கள் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை காலை 9.15, செங்கல்பட்டு - கடற்கரை காலை 10.55, காலை 11.30, மதியம் 12.20, 1, 1.50 மணி ரயில்களும் திருமால்பூர் - கடற்கரைக்கு காலை 10.40 மணி ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதற்கிடையே, பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கத்திலும் தலா 8 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் 20 முதல் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close