[X] Close

ஜோலார்பேட்டையில் இருந்து முதல்நடையாக 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னை வந்தது ரயில்: அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்பு


25

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:00 am
  • அ+ அ-

ஜோலார்பேட்டையில் இருந்து சென் னைக்கு ரயில் மூலம் 50 வேகன்களில் முதல்நடையாக 25 லட்சம் லிட்டர் குடிநீர் நேற்று வந்து சேர்ந்தது. தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக சென்னை மற் றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால், “ஜோலார் பேட்டையில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக வேலூர் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் உபரிநீர் கொண்டு வரப்படும்” என்று முதல்வர் கே.பழனி சாமி அண்மையில் அறிவித்தார்.

இதையடுத்து, அதற்கான ஏற்பாடு கள் தீவிரப்படுத்தப்பட்டன. குழாய்கள் பதிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. பின்னர் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னை வில்லி வாக்கத்துக்கு ரயிலில் கொண்டு வரப் படும் குடிநீர், அங்கிருந்து கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் தயார் நிலை யில் வைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, ஜோலார் பேட்டையில் 50 வேகன்களில் நேற்று முன்தினம் ஏற்றப்பட்ட குடிநீர், நேற்று காலை 7.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது. முற்பகல் 11.35 மணிக்கு வில்லிவாக்கம் வந்தடைந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் பங்கேற்பதில் தாமதமானதால், குடிநீர் ரயில் தண்டையார்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 2.30 மணியளவில் மீண்டும் வில்லிவாக் கத்துக்கு ரயில் வந்தது. அங்கு, உள் ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் உயர் அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர்.

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்த போது கூறியதாவது: முதல்வர் பழனி சாமி உத்தரவின் பேரில் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வேலூர் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் உபரிநீர் ரயில்மூலம் கொண்டு வரப்பட் டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தினமும் 1 கோடி லிட்டர் சென்னைக்கு கொண்டு வரப்படும். அதன்படி, இன்று முதல் நடையாக 50 வேகன்கள் பொருத்தப் பட்ட குடிநீர் ரயிலில் 25 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. வேகன்களில் உள்ள குடிநீரை, புழலில் இருந்து கீழ்ப்பாக்கம் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் செலுத்துவதற்காக 130 மீட்டர் நீளத்தில் 100 இணைப் புக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழாய்கள் வழியே கீழ்ப்பாக்கம் கொண்டு செல்லப்படும் தண்ணீர் அங்கு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக் களுக்கு விநியோகிக்கப்படும்.

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம், கல்குவாரிகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் மூலம் சென்னையில் தின மும் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் விநி யோகிக்கப்படுகிறது. ஜோலார்பேட் டையில் இருந்து வில்லிவாக்கத்துக்கு தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் 6 மாதங்களுக்கு கொண்டு வரப் படும். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

ஜோலார்பேட்டையில்..

முன்னதாக ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரயிலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, "குடிநீர் கொண்டுசெல்ல 6 மாதங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்புகள் நிரந்தரமாக இருக்கும். தமிழகத்தில் எந்த மாவட்டத் துக்கோ அல்லது மற்ற மாநிலங் களுக்கோ கூட இங்கிருந்து குடிநீர் அனுப்பலாம். இந்தப் பணியை கிட்டத் தட்ட 250 தொழிலாளர்கள் கடந்த 20 நாட் களாக இரவு, பகல் பாராமல் பணி புரிந்து முடித்துள்ளனர். இதுபோன்ற திட்டம் இவ்வளவு விரைவாக செய்வது இதுவே முதல்முறை" என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close