[X] Close

விண்ணப்பிக்காமலே அனைத்து சான்றுகளும் கிடைக்கும்; ‘மக்களைத் தேடி அரசு’: ரூ.90 கோடியில் புதிய திட்டம்- சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


90

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 07:57 am
  • அ+ அ-

மக்கள் விண்ணப்பிக்காமலேயே அனைத்து வகை ஆவணங்கள், சான்றிதழ்களையும் வழங்கும் ‘மக்களைத் தேடி அரசு’ எனும் புதிய திட்டம் ரூ.90 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

ஆளுநர் உரை மீதான விவா தத்துக்கு பதில் அளித்துப் பேசும் போது, 4-வது தொழில் புரட்சிக் கான தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் தமிழக மின் ஆளுமையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்தேன். அதன் அடிப்படையில், வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பமான ‘நம் பிக்கை இணையம்’ (Blockchain) மூலம் பரிவர்த்தனைகளில் உள்ள உண்மைத் தன்மையை அறியும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ரூ.40.80 கோடியில் ‘நம்பிக்கை இணையக் கட்டமைப்பு’ (Blockchain Backbone Infrastructure) அமைக்கப்படும். இந்தத் தொழில்நுட்பத்தில் சேக ரிக்கப்படும் தகவல்கள், தரவு களை மாற்ற முடியாது என்ப தால் அரசின் தரவுகள் அனைத் தையும் பாதுகாப்பாக வைக்க முடியும்.

அரசுத் துறைகளின் பல்வேறு சேவைகளை அத்துறை சார்ந்த அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் அரசு இ-சேவை மையங் கள், இணையதளம், கைபேசி செயலி வாயிலாக விண்ணப் பித்தும் பொதுமக்கள் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சான்றிதழ்கள், ஆவணங்கள் பெறுவதை மேலும் எளிதாக்கும் விதமாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ‘மக்கள் எண்’ உருவாக்கப்பட்டுள் ளது.

குடிமக்கள் பெட்டகம்

இதன்மூலம் ஒவ்வொரு நபருக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சட்டப்படி யான ஆவணங்கள், சான்றிதழ் கள் குடிமக்கள் பெட்டகத்தில் இருந்து (Citizen Vault) விண்ணப் பிக்காமலேயே குறிப்பறிந்து தானாகவே வழங்கப்படும்.

இதைப் பெற, தனிநபர் தனது கைபேசி எண்ணை பயனாளர் குறியீடாகவும், ஒருமுறை பயன் படுத்தும் கடவுச்சொல்லை (OTP) பயன்படுத்தியும் பெற்றுக் கொள்ள லாம். ‘மக்களைத் தேடி அரசு’ என்ற இத்திட்டம் ரூ.90 கோடியில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் தெரி வித்தார்.

சான்றிதழ்கள் பெற தாமதம்

பிறப்பு, இறப்பு, இருப்பிடம், வருமானம், சாதி, வாரிசு என பல் வேறு சான்றிதழ்களை கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங் களுக்கு நேரில் சென்று விண்ணப் பித்து வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் பெரும் தாமதம் ஏற்பட்டு மாதக்கணக்கில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது.

எளிதாக்கிய இ-சேவை

இந்த நிலையில், அரசு சான்றிதழ் களைப் பெறுவதில் மக்களின் சிரமங்களையும், தேவையற்ற தாம தத்தையும் குறைக்க, இணையம் மூலமாக சான்றிதழ் வழங்கும் முறையை தமிழக அரசு கொண்டு வந்தது. இதற்காக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்கள் திறக்கப்பட்டன.

இந்த இ-சேவை மையங்களுக் குச் சென்று இணையதளம் மூல மாக விண்ணப்பித்து அனைத்து வகையான சான்றிதழ் களையும் மக்கள் பெற்று வருகின்றனர். இதன் மூலம், சான்றிதழுக்காக காத்திருப் பது தவிர்க்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ‘அம்மா’ திட்டங் கள் மூலமாகவும் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் மக்கள் குறை தீர்வு முகாம்கள் அவ்வப் போது நடத்தப்பட்டும், உரிய நலத் திட்ட உதவிகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி சான்றிதழ் வழங்குவதை மேலும் எளிதாக்கும் வகையில், ‘மக்களைத் தேடி அரசு’ என்ற திட்டத்தை தமிழக அரசு தற் போது அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசின் அனைத்து வகை யான ஆவணங்கள், சான்றிதழ் களை பொதுமக்கள் மேலும் எளி தாகப் பெற முடியும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close