[X] Close

நெல்லையில் மஞ்சள் ஆலையில் தீ விபத்து: 4 தொழிலாளர்கள் படுகாயம்


4

  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 09:55 am
  • அ+ அ-

-அசோக் குமார்

நெல்லை மாவட்டம் பிரானூர் பகுதியில் உள்ள மஞ்சள் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

தென்காசி அருகே பிரானூர் பகுதியில் இலஞ்சியிலிருந்து வல்லம் செல்லும் வழியில் மஞ்சளில் இருந்து எசன்ஸ் தயாரிக்கும் ஆலை இருக்கிறது. தனியாருக்குச் சொந்தமான இந்த ஆலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது 4 தொழிலாளிகள் உள்ளே இருந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து தீயணைப்புப் படையினர் உடனடியாக அங்கு சென்றனர்.  அவர்கள் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்களை தீ விபத்தில் இருந்து மீட்டனர்.  காயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேரும் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுனர்.

தீ விபத்தில் ஆலையில் இருந்த கொதிகலன்கள் பற்றி எரிந்து வெடித்துச் சிதறியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close