[X] Close

2019-ம் ஆண்டுக்கான விசிக விருதுகள்: ‘இந்து’ என்.ராமுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது


2019

  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 07:53 am
  • அ+ அ-

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) சார்பில் 2019-ம்ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விசிக சார்பில் ஆண்டுதோறும் ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராசர் கதிர்’, ‘காயிதேமில்லத் பிறை’, ‘அயோத்திதாசர் ஆதவன், ‘செம்மொழி ஞாயிறு’ ஆகிய 6 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசிகதலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், ‘2019-ம்ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’விருது - ‘தி இந்து’ குழும வெளியீடுகளின் தலைவர் என்.ராம்,‘பெரியார் ஒளி ’ விருது - விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், ‘காமராசர் கதிர்’ விருது - காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ‘காயிதேமில்லத் பிறை’ விருது - அறிஞர் செ.திவான், ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது -நாகப்பன், ‘செம்மொழி ஞாயிறு’ விருது - தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. விருதுகள் வழங்கும் விழாவரும் 29-ம் தேதி மாலை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close