[X] Close

மக்கள் எதிர்ப்பால் எங்கள் மீது பழி போடுகின்றனர்; நீட் தேர்வுக்கு திமுகதான் காரணம்: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 07:50 am
  • அ+ அ-

தமிழகத்தில் நீட் தேர்வு வந்ததற்கு மூலகாரணம் திமுக. மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பியதும் எங்கள் மீது பழிபோட பிரச்சினையைத் திருப்பிவிடுகின்றனர் என முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

மதுரை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2010–ம் ஆண்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு அறிவிப்பாணை வெளியானது. அவர்கள் ஆட்சியின்போதுதான் நீட் தேர்வும் வந்தது. மக்களிடையே எதிர்ப்பு வந்ததால், அந்தப் பழியைஎங்கள் மீது திருப்பி விடுகிறார்கள். நீட் தேர்வுக்கு முழுக் காரணம் திமுகதான்.

அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பை அளித்துள்ளோம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாயத்தினர் போட்டியிடும் வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டதால், இந்தக் குறையைப் போக்க அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பகுதியில் எந்த ஓர் அணையும் கட்டக்கூடாது என்றுஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் அணையைத் தடுத்து வேறு பக்கம்திருப்பக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அணை கட்ட இயலாது.

சேலம் 8 வழி சாலைத் திட்டத்தில் எந்த ஒரு பணியும் நடக்கவில்லை. இந்த விரைவுச்சாலை கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர்,ஈரோடு, சேலம் என கொச்சி வரைசெல்கிறது. சேலத்துக்கு வருவதைப் போல பேசி வருகிறார்கள். சேலத்துக்காக இந்தச் சாலை அமைக்கப்படவில்லை. சேலத்தின் வழியாகச் செல்கிறது. சேலத்தில் இருந்து சென்னை செல்ல 70 கிமீ மிச்சப்படுகிறது. 19 ஆண்டுகளில் வாகன எண்ணிக்கை 3 மடங்கானதுடன், போக்குவரத்தும் அதிகமாகிவிட்டது. இதற்கேற்ப சாலைகள் அமைத்துக் கொடுப்பது அரசின் கடமையாகும். உயிர்ச் சேதம், விபத்தைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவுமே இந்தச் சாலையை அமைக்க மத்திய அரசு முன்வந்தது.

உள் கட்டமைப்பு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் முதலீடு செய்ய வருவார்கள். திமுக ஆட்சியில் 734 கிமீ சாலைடி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது போடப்பட்டது. அப்போது எல்லாம் நிலத்தைமக்களிடத்தில் இருந்து எடுக்கவில்லையா? வேண்டுமென்றே, திட்டமிட்டு இந்தத் திட்டம் வரக்கூடாது, வந்தால் அதிமுக அரசுக்குநற்பெயர் கிடைக்கும் என்ற தவறான நோக்கத்துடன்தான் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close