[X] Close

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: காஞ்சியில் கூடுதலாக 1,000 போலீஸார் பாதுகாப்பு


1-000

  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 07:46 am
  • அ+ அ-

அத்திவரதர் வைபவத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்புப் பணிகளில் கூடுதலாக 1000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வரிசையில் வருவதற்காக தடுப்புக் கட்டைகள் மேற்கூரை அமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வருகிறது. மிகவும் அரிதான விழா என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. கடந்த 11 நாட்களில் அத்திவரதரைத் தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிஉள்ளது.

ஏற்கெனவே இங்கு 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் கூடுதலாக 4 காவல் கண்காணிப்பாளர்கள், 10 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 40 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விரிவாக்க பணிகள்

அத்திவரதர் நேற்று காவிப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர். தடுப்புக் கட்டைகளைத் தாண்டி வரிசையில் நின்றதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதல் தூரத்துக்கு தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டன. மேற்கூரைகள் அமைக்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close