[X] Close

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூல் இன்று மாலை வெளியீடு: ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ பங்கேற்பு


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 07:47 am
  • அ+ அ-

கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள ‘தமிழாற்றுப்படை’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை நடக்கிறது. தமிழ் இலக்கிய, இலக்கண முன்னோடிகளான திருவள்ளுவர், அவ்வையார், ஆண்டாள் உள்ளிட்ட 24 ஆளுமைகள் பற்றி கவிஞர் வைரமுத்து ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் எழுதி, பல நகரங்களில் அரங்கேற்றி வந்தார். இக்கட்டுரைகள் ‘தமிழாற்றுப்படை’ என்ற பெயரில் நூலாக வெளிவருகிறது.

இதன் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார்.

அதே மேடையில் தமிழாற்றுப்படையின் ஒலிப்புத்தகமும் வெளியிடப்படுகிறது. 12 மணி நேரம் ஓடும் அந்த ஒலிப்புத்தகத்தை கவிஞர் வைரமுத்து தன் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளார். இதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட, ஓய்வுபெற்ற நீதிபதி விமலா பெற்றுக்கொள்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close