[X] Close

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு


3

  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 07:41 am
  • அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை தலைமை இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை தொடங்கி, முதல்கட்ட காலத்தில் காற்றானது இமய மலை வரை சென்று வலு குறைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வது அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிர மடைய மேலும் ஒரு வாரம் ஆகும். அதுவரை தமிழகத்தில் வெப்ப சலன மழை பெய்யும்.

தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப் புள்ளது. வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செமீ, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 4 செமீ, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், சேலம் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவு களின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 102 டிகிரி, திருத் தணியில் 101 டிகிரி, கரூர் பரமத்தி, வேலூர் ஆகிய இடங் களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறி னர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close