[X] Close

ஐடி வேலையை உதறிவிட்டு தமிழ்ப் பாரம்பரிய உணவகம் தொடங்கிய இளைஞர்


chennai-eatery-is-popularising-traditional-tamil-food

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Jun, 2018 13:03 pm
  • அ+ அ-

இளம் வயது; கை நிறைய சம்பளம் என்றிருந்தால் அடுத்தது வீடு, வாகனம், திருமணம் என்றே இலக்குகள் விரியும். ஆனால், இந்த இளைஞருக்கு கை நிறைய சம்பளம் திருப்திகரமானதாக இல்லை. அர்த்தமுள்ளதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருந்தது.

அதன் காரணமாகவே அவர் பார்த்துவந்த ஐடி வேலையை உதறிவிட்டு உணவகம் தொடங்கினார் சுரேஷ்.
இவர் உணவகன் தொடங்க உந்து சக்தியாக இருந்தது மதுரையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் துவக்கிவைத்த உழவன் உணவகம். அந்த உணவகத்தில் பரிமாறப்பட்ட சிறு தாணிய உணவு வகைகள் சுரேஷை வெகுவாக ஈர்த்தது.

2014-ல் சென்னை விருகம்பாக்கத்தில் திருக்குறள் உணவகம் என்ற பெயரில் உணவகம் ஒன்றைத் தொடங்கினார். ஆனால், அந்த உணவகம் 2 மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை. சுரேஷ் சற்றும் மனம் தளரவில்லை. 
2016-ல் புறநகர்ப் பகுதியான கரையான்சாவடியில் வெறும் 2 பேர் மட்டுமே சாப்பிடும் வசதி கொண்ட உணவகத்தைத் தொடங்கினார். அங்கும் சிறு தானிய ஸ்பெஷல் உணவுகள்தான் பரிமாறப்பட்டன. அந்த உணவகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆரம்பத்தில் வெறும் 12 வகையான உணவு வகைகளை மட்டுமே வழங்கினார்.

இப்போது, அடையாறில் பெரிய அளவில் உணவகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இப்போது இவருடன் இவரது நண்பர் கார்த்திகேயனும் இத்தொழிலில் இணைந்துள்ளார். 

சிறுதாணிய சப்பாதி, மூலிகை தோசை, வெஜிடேரியன் ஆம்லெட் என 45 வகையிலான உணவுகள் இங்கு விற்கப்படுகின்றன. இது குறித்து கார்த்திகேயன், "எங்கள் வாடிக்கையாளர்கள் உடல் சார்ந்த அக்கறை உடையவர்கள். இளம் வயதினர் நிறைய பேர் எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். தமிழ்க் கலாச்சார உணவு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த தொழிலில் நாங்கள் இப்போது பொருளாதார தன்னிறைவு அடைந்துள்ளோம்" என்றார்.

தொல்காப்பியர் விருந்து, நம்மாழ்வார் விருந்து..
சுரேஷ், நம்மாழ்வாரின் மிகப்பெரிய விசிறி. நம்மாழ்வார் இருந்தபோது அவரது வேளாண் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வார். அங்கிருந்துதான் அவருக்கு சிறுதாணிய உணவுகள் மீது ஈர்ப்பு வந்தது. அதன் காரணமாகவே தனது உணவகத்தில் விற்கப்படும் ஸ்பெஷல் மீல்ஸுக்கு நம்மாழ்வார் விருந்து என்றும் தமிழ்ப் பற்றை பறைசாற்ற மற்றொரு மீல்ஸ் வகைக்கு தொல்காப்பியர் விருந்து என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close