[X] Close

திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் மனு தாக்கல்


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:17 am
  • அ+ அ-

-,

திண்டுக்கலில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் கடந்த பிப்.15-ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக எனக்கு எதிராக திண்டுக்கல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தனிநபர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில் நான் பேசும்போது, "கோடநாடு கொலை வழக்கில் தமிழக முதல்வர் பழனிசாமி விரைவில் சிறைக்குச் செல்வார். தமிழகத்தில் கொலைகாரன், கொள்ளைக்காரன் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பில்லை" என குறிப்பிட்டதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை. திமுக மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை கீழமை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டது. பேச்சுரிமை, கருத்துரிமையையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

எனவே, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள என் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும். அந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close