[X] Close

ராஜராஜசோழன் விவகாரத்தில் பா.ரஞ்சித்துக்கு கண்டனம்; ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை: தஞ்சாவூரில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தகவல்


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:18 am
  • அ+ அ-

-,

ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

தஞ்சாவூரில் ராஜராஜ சோழன் சிலைக்கு நேற்று மாலை அணி வித்த அவர் பின்னர் செய்தியாளர் களிடம் கூறியது: இஸ்ரேலில் ஹைட்ரோகார்பன் மூலம்தான் முழு எரிசக்தியும் நிறைவு செய்யப் படுகிறது. அந்நாடு உலக அளவில் விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்நாட்டு வயலில் ரசாயன உரத்தைக் கொட்டுவ தில்லை. நம் நாட்டில் வயலில் ரசாயன உரம் கொட்டப்படுகிறது.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. நிலத்தடி நீர் மட்டம் 2,000 அடிக்குள் இருக்கிறது. ஆனால், ஹைட்ரோகார்பன் 6,000 அடிக்கும் அதிகமான ஆழத்தில்தான் எடுக்கப்படவுள்ளது. நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்தினால் நிலத்தடி நீர் மாசுபடும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். ஆனால், இந்த முறையை பிரதமர் மோடியே மறுத்துவிட்டார்.

எனவே, ஆழ்துளைக் கிணறு அமைப்பதுபோல மேற்கொள்ளப் படும்போது, 6,000 அடிக்கு கீழே உள்ள இயற்கை எரிவாயு மட்டுமே கிடைக்கும். அதனால், பாதிப்பு எது வும் ஏற்படாது. வைகோ, அய்யா கண்ணு போன்ற சிலர்தான் வேண்டு மென்றே பீதியை ஏற்படுத்தி, மக்களைத் தூண்டிவிடுகின்றனர்.

தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு தமிழ் நாட்டில் பெரிய சதி நடக்கிறது. மேலும், தலித் என்ற போர்வையில் இந்துக்களைப் பிளவுபடுத்தி மத மாற்றம் செய்கின்றனர்.

காவிரி நீர் மேலாண்மை, நில சீர்த்திருத்தம் உள்ளிட்டவற்றை கொண்டுவந்தது மாமன்னன் ராஜ ராஜ சோழன்தான். உலகத்திலேயே முதல் கப்பற்படையை அமைத்த வர் ராஜேந்திர சோழன். அதனால் தான் ராஜேந்திர சோழனுக்கு மோடி அரசு அஞ்சல்தலை வெளியிட்டது. நம் கப்பற்படையின் ஒரு கப்பலுக்கு ராஜேந்திர சோழனின் பெயரை வைத்துள்ளோம். இந்நிலையில், ராஜராஜசோழன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஈடுபட்டுள்ளார் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close