[X] Close

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்து ஆம்னி பேருந்தை திருடியவர் கைது


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:14 am
  • அ+ அ-

-,

திருச்சியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்தை திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்தும் வாகன தணிக்கையின்போது, முறையான ஆவணம் இல்லாமல் சிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்து, பிராட்டியூரில் உள்ள திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து (ஆர்.டி.ஓ) அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம்.

அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தை, கடந்த ஜன.31-ம் தேதி மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார். இதுகுறித்து, செசன்ஸ் கோர்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து, திருட்டு நடைபெற்ற நாளில் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களின் விவரங்களைப் பெற்று தனிப்படையினர் ஆய்வு செய்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுயம்பு என்பவர் இத்திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் திருச்சுழி சாலையில் சுயம்புவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தனியார் ஆம்னி பேருந்து மீட்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் பாராட்டினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close