[X] Close

தூத்துக்குடி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும்: தமிழிசை தகவல்


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:13 am
  • அ+ அ-

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய 4 நாட்களிலேயே விலக்கு அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது. காலதாமதமாக தெரிவிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற முன்னேறிய சமூகத்தவருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் தொடர்பாக சிலர் தவறான கருத்தை பரப்புகின்றனர். இந்த நடைமுறை ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு சலுகையை பறிக்காது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். அத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற கனிமொழி, தனது கணவர், மகன் ஆகியோரது வருவாய், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தகவல்களை மறைத்துள்ளார். அதுகுறித்தும், தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு குறித்தும் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். 2ஜி வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்குகளின் விசாரணையின் முடிவில் தூத்துக்குடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close