[X] Close

அத்திவரதரை தரிசிக்க அரசியல் தலைவர்களின் சிபாரிசு கடிதங்களால் சர்ச்சை


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:02 am
  • அ+ அ-

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அத்திவரதரை தரிசிக்க முக்கியப் பிரமுகர்களுக்கான அனுமதிச் சீட்டு அளிக்குமாறு அரசியல்வாதி கள் அளிக்கும் சிபாரிசுக் கடிதங் கள் பெரும் விமர்சனத்துக்கு ஆளா கியுள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜ பெரு மாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளும் அத்தி வரதராஜ பெருமாள் விழா கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 40 ஆண்டுகள் அனந்தசரஸ் குளத்தில் மூழ்கிய நிலையில் இருக்கும் அத்திவரதர் 48 நாட்கள் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்க ளுக்கு அத்திவரதரை வரத ராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் தரிசிக்கலாம். தினந்தோறும் சுமார் 1 லட்சம் பக்தர் கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள் ளிட்டோர் கடந்த 6-ம் தேதி அத்திவரதரை தரிசனம் செய் துள்ளனர்.

.தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர் கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். தினமும் குறைந்தது 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தால் மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க முடியும்.

இந்நிலையில் வரிசையில் நிற் காமல் எளிதில் தரிசிக்க முக்கியப் பிரமுகர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்குமாறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கடிதம் அளித்து வருகின்றனர்.

திமுக எம்பிக்கள் எஸ்.ஜெகத் ரட்சகன், டி.கே.எஸ். இளங் கோவன் உள்ளிட்டோர் அளித்த சிபாரிசு கடிதங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பொது மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டா லினின் மனைவி துர்கா ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு அத்திவரதரை தரிசித்தார். அந் தப் படங்களையும் சமூக ஊட கங்களில் வெளியிட்டு விமர் சித்து வருகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close