[X] Close

3 புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும்; ரூ.312 கோடி செலவில் 10 ஆயிரம் தடுப்பணைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


3-312-10

  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 07:36 am
  • அ+ அ-

தமிழகத்தில் மேலும் 3 புதிய சட்டக் கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங் கப்படும் என்று முதல்வர் கே.பழனி சாமி 110-விதியின் கீழ் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார். இது தவிர நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.312 கோடியில் ஊரகப்பகுதிகளில் உள்ள ஓடைகள் கால்வாய்களில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப் படும் என்றும் அப்போது அவர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

கடந்த 2015-16-ம் ஆண்டில் தமிழ் நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக 5 ஆயிரம் கி.மீ. சாலை களை மேம்படுத்த நடப்பாண்டில் ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்படும். கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சாலைகள், பாலங்களின் மறு சீர மைப்பு பணிகள் ரூ.200 கோடியே 53 லட்சத்தில் மேற்கொள்ளப்படும். பழுதடைந்த கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளை வலுப்படுத்தவும். தார் சாலைகள் அமைக்கவும் ரூ.255 கோடியே 21 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, ஊரக பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி யாளர்களை கொண்டு 10 ஆயிரம் தடுப்பணைகள் ரூ.312 கோடியில் கட்டப்படும்.

நடப்பாண்டில் மகளிர் குழுக் களுக்கு வங்கிக் கடன் இணைப்பின் மூலம் ரூ.12,500 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக பொருளாதார புத்தாக் கத் திட்டம் என்ற புதிய திட்டம், அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.210 கோடியே 27 லட்சத்தில் கடலூர், ஈரோடு, சேலம், தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 4 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டு ரூ.40 கோடியே 61 லட்சம் ஒதுக்கப்படும்.

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு ரூ.125 கோடியில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனமும் ஒருங்கிணைந்த ஒரு வளாகம் அமைக்க சேலத்தில் 2 ஏக்கர் அரசு நிலம் வழங்கப்படும்.

சட்டத்துறை

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தற்போது இயங்கி வரும் பல்வேறு சார் நீதிமன்றங்களுக்கு கூடுதல் இடம் அளிக்க ரூ.202 கோடியே 40 லட்சத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் ரூ.5 கோடியே 9 லட்சத்தில் ஒருங் கிணைந்த நீதிமன்ற கட்டிடம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட கட்டிடங் களும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி யில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடமும் வாகன நிறுத்தம், நீதிபதிகளுக்கான குடியிருப்பும் ரூ.10 கோடியே 93 லட்சத்தில் கட்டப்படும்.

குறைந்த செலவில் சட்டக் கல்வியை வழங்கிட புதிதாக 3 சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதற் காக ரூ.9 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உடனடியாக ஆரம்பக்கட்ட பணி களை மேற்கொள்ள ஒவ்வொரு கல் லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக் கப்படுவார். கோவை, நெல்லை சட்டக்கல்லூரிகளில் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.

பதிவுத்துறை

சேலத்தில் ரூ.1 கோடி மதிப்பில் துணை பதிவுத்துறை அலுவலகம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 24 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ரூ.24 கோடியில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும். நடப்பாண்டில் திருச்சி வணிகவரி இணை ஆணையர் அலுவலகத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வணிக வரித்துறை அலுவலக வளாகம் ரூ.23 கோடியே 38 கோடி மதிப்பில் கட்டப்படும்.

இணையத்தின் மூலம் ஆவணங் களை பதிவு செய்யும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்த புதிய கணினி மற்றும் உபகரணங்கள் ரூ.21 கோடியே 63 லட்சம் மதிப்பில் வாங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close