[X] Close

அத்திவரதரை 6 மணி நேரம் வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்: குடியரசுத் தலைவர் நாளை காஞ்சிபுரம் வருகை


6

  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 07:37 am
  • அ+ அ-

-,

அத்திவரதர் விழாவுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதால், சுமார் 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரி சிக்க வேண்டிய நிலை நேற்று ஏற்பட்டது. முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் வழியாகச் சென்றவர்கள் 30 நிமிடங்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் நடைபெறுவதால் ஏராளமானோர் வந்து குவியத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் அதிகரிப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே கிழக்கு கோபுரம் வரை வரிசை இருக்கும் என்று திட்டமிடப்பட்டு அதுவரை மட் டுமே தடுப்புக் கட்டைகள் அமைக் கப்பட்டன. தற்போது அதனையும் தாண்டி 2 கிமீ தூரம் வரை வரிசை நீள்கிறது. இதனால் தற்போது தடுப்புக் கட்டைகள் கோயிலின் வெளிப்புற மதில்சுவர் ஓரம் கட்டப்பட்டுள்ளன.

காலையில் 6 மணிக்கு வரிசையில் வந்து நின்ற பொது மக்கள் பலர் பகல் 12 மணிக்கு மேல்தான் அத்திவரதரை தரிசனம் செய்ய முடிந்தது. இதனால் வெளியே வந்த முதியவர்கள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டனர். விஐபி வரிசைவிஐபி நுழைவு வாயிலில் பொதுவாக உள்ளே சென்று உடனடியாக அத்திவரதரை தரிசிக் கும் நிலை இருந்தது. அதிலும் நேற்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சிலர் வெளியே வரும் வழியின் வழியாக உள்ளே நுழைந்ததால் நெரிசல் ஏற்பட்டது. விஐபிக்கள் சுமார் 30 நிமிடம் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசித்தனர்.

குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை (ஜூலை 12) காஞ்சிபுரம் வருகிறார். அவர் விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வருகிறார். மாலை 3 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை ஒட்டி காஞ்சிபுரம் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஏற்கெனவே காஞசி புரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் 3 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் உள்ளன. அங்கு ஹெலிகாப்டரை இறக்க திட்டமிடப்பட்டுள்ள தாகத் தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் கேட்டபோது, "குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசிக்கிறார். பிரதமர் வருகை குறித்து தகவல் ஏதும் இல்லை" என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close