[X] Close
 

ரஜினியை பின்னுக்குத்தள்ளிய கமல்!- அரசியலில் அல்ல..


twitter-chat-on-kollywood-stars-kamal-emerges-on-top

  • பாரதி
  • Posted: 29 Jun, 2018 10:50 am
  • அ+ அ-

கோலிவுட்டில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் ஆனால் கோலிவுட்டில் ட்விட்டராட்டிகளால் அதிகம் பேசப்பட்ட ட்விட்டர் ஸ்டார் ஆகியிருப்பது வேறு யாருமல்ல உலகநாயகம் கமல்ஹாசன் தான்.

அரசியல் பதிவுகளுக்காகவே அதிகமாக ட்விட்டரைப் பயன்படுத்தி ட்விட்டர் அரசியல்வாதி பட்டத்திலிருந்து கட்சித் தலைவராகி இப்போது ட்விட்டர் ஸ்டாரும் ஆகியிருக்கிறார் நம்மவர்.

2018 ஜனவரி முதல் மே மாதம் வரை ட்விட்டராட்டிகளால் அதிகம் பேசப்பட்ட கோலிவுட் ஸ்டார் யார் என்று கணக்கிடப்பட்டது. அதில், கமல்ஹாசனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ரஜினி 2-வது இடத்தில் இருக்கிறார். சினிமாவில் இதுவரைக்கும் ரஜினி, கமல் என்ற வரிசையில்தான் இருக்கிறார் கமல். ஆனால், அரசியல் கட்சி ஆரம்பத்தில் முந்திக்கொண்டு கமல், ரஜினி என்று முந்திக் கொண்டவருக்கு தற்போது ட்விட்டராட்டிகளும் முதலிடம் கொடுத்துள்ளனர்.
முதல் இரண்டு இடம் கமலுக்கும் ரஜினிக்கும் சென்றுவிட நடிகர் சூர்யா 3-வது இடத்திலும் பிரகாஷ் ராஜ் 4-வது இடத்திலும் உள்ளனர். 5-வது இடத்தில் இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத்.

கமல் ஜெயிக்க காரணம் என்ன?
கமலுக்கு முதலிடம் கிடைக்கக் காரணம் காவிரி விவகாரம், விஸ்வரூபம் 2 பிரச்சினை, அவரது கட்சி மக்கள் நீதி மய்யம் ஆகியவை குறித்து அவர் அடிக்கடி பதிவு செய்து ட்வீட்களே. ரஜினிகாந்த்துக்கு 2-வது இடம் கிடைக்கக் காரணம் காலா ரிலீஸும் கஸ்டமைஸ்டு எமோஜிக்களுமே.

இது குறித்து பொழுதுபோக்கு துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் கேயா மாதவனி சிங் கூறும்போது, "கமல், ரஜினி இருவருக்குமே ட்விட்டரில் ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம். ஆனால், ரஜினி ஆன்லைன் தளத்தில் சற்றே விறுவிறுப்பாக இயங்குவதால் அவருக்கு சர்வதேச அளவில் அதிக ஈர்ப்பு இருக்கிறது. தமிழ்த் திரையுலகை வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் மிக நெருக்கமாக ஃபாலோ செய்கின்றனர்" என்றார்.

பெண்களில் யாருக்கு முதலிடம்..
நடிகைகளில் சமந்தா முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இருக்கின்றனர். 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் தமன்னா.

டாப் 10 ஹேஷ்டேக்..
ட்விட்டரில் 2018 மே வரை அதிகம் பயன்படுத்த 10 ஹேஷ்டேக் பட்டியல் வெளியாகியுள்ளது. #Thalapathy, #Thala, #Ajith, # Mersal  ஆகியன டாப் 10 ஹேஷ்டேகுகளில் இடம்பிடித்துள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close