[X] Close

பாண்டியன் ரயிலில் ட்ரெயின் கேப்டன்!


train-captain-in-pandian-express

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Jun, 2018 15:16 pm
  • அ+ அ-

மதுரை - சென்னை இடையே இயக்கப்படும் பாண்டியன் அதிவிரைவு ரயிலில் ட்ரெயின் கேப்டன் என்ற புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட்டிருக்கிறர். அட எங்களுக்கு எல்லாம் கிரிக்கெட் டீம் கேப்டன் தான் தெரியும் அதென்ன ட்ரெயின் கேப்டன் என்கிறீர்களா?

ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது பயணிகளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் இந்த ட்ரெயின் கேப்டனைத் தொடர்புகொள்ளலாம். அவர் பிரச்சினைக்கு தீர்வு கிட்ட உதவுவார்.

டிக்கெட் பரிசோதகர்களிலேயே மூத்த பணியாளருக்கு இந்த ட்ரெயின் கேப்டன் பொறுப்பு ஒதுக்கப்படுகிறது. அவருக்கு ட்ரெயின் கேப்டன் என்ற பேட்ஜும் வழங்கப்படுகிறது. ரயிலில் முன்பதிவு செய்யும் பயணிகளின் தொலைபேசி எண்ணுக்கு ட்ரெயின் கேப்டனின் மொபைல் எண்ணை குறுந்தகவலாக அனுப்புகின்றனர். இந்த ட்ரெயின் கேப்டனுக்கு என்று ரயிலில் ஒரு படுக்கையும் ஒதுக்கப்படுகிறது. அவர் அங்குதான் இருப்பார். பயணிகள் ஏதாவது உதவி தேவையென்றால் ட்ரெயின் கேப்டனைத் தொடர்பு கொள்ளலாம். ரயில் சேவைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகாரும் தெரிவிக்கலாம்.

ஒரு ரயிலில் பணியில் உள்ள ஹவுஸ்கீப்பிங், எலக்ட்ரிக்கல், ஆர்பிஎஃப் ஊழியர்கள் என அனைவரும் ட்ரெயின் கேப்டனுக்கு கட்டுப்பட்டுவர்களே. அவர்கள் எந்தப் புகாராக இருந்தாலும் ட்ரெயின் கேப்டனிடம் தெரிவித்துவிட்ட சரி செய்வர். அதேபோல் அவுட்சோர்சிங் மூலம் பணியமர்த்தப்படும் சூப்பர்வைசர்களும் ட்ரெயின் கேப்டனின் கட்டுப்பாட்டின் கீழே வருவர்.
மதுரை ரயில்வே கோட்டத்தில் இதுவரை பாண்டியன் அதிவிரைவு ரயிலில் மட்டுமே ட்ரெயின் கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில்,  ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், காரைக்கால் - எர்ணாகுளம் டீ கார்டன் எக்ஸ்பிரஸ், திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் - சென்னை உழவன் எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை - கோவை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ், மன்னார்குடி - சென்னை மன்னை எக்ஸ்பிரஸ், திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ், புதுச்சேரி - கன்னியாகுமர் எக்ஸ்பிரஸ், விழுப்புரம் - காரக்பூர் எக்ஸ்பிரஸ், வேலாங்கன்னி - வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் இந்த ட்ரெயின் கேப்டன் சேவை வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் பலரும் இந்த சேவையை வரவேற்றாலும்கூட ரயில்வே ஊழியர்கள் சிலரோ இந்த சேவையால் பயனேதும் இல்லை என்கின்றனர். நெடுந்தூரம் செல்லும் ரயில்களில் ஏற்கெனவே ரயில் சூப்பிரன்டன்டுகள் என்ற போஸ்டிங் உள்ளது. 48 மணி நேரம் பயணிக்கும் ஒரு ரயிலில் இதுபோன்ற பணியாட்களால் பயனிருக்கும் ஆனால் வெறும் 7 அல்லது 8 மணி நேரம் செல்லும் ரயில்களில் இத்தகைய ஊழியர்கள் நியமனம் பணியாட்கள் திறனை வீணடிக்கும் செயல் என்கின்றனர் பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர்கள் சிலர்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close