[X] Close
 

10 ஆயிரம் ஏக்கரில் தென்னை: வறட்சியால் பட்டுப்போன சோகம்


palm-tree-drought

சாத்தூர் அருகே குண்டலகுத்தூரில் பட்டுப் போன தென்னை மரங்கள்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 25 Jun, 2018 12:45 pm
  • அ+ அ-

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி காரணமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

வறட்சி மாவட்டங்களில் ஒன்றான விருதுநகரில் சுமார் 1.22 லட்சம் ஹெக்டேரில் உணவு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சுமார் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்குத் தெடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 200 டன் முதல் 250 டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.40-க்கு தனியார் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. தென்னை சாகுபடி குறைவதால் தேங்காய் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு வறட்சி, இந்த ஆண்டில் கோடை முடிந்தும் கொளுத்தும் வெயில் போன்றவற்றால் தென்னை மரங்கள் பட்டுப்போய் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். 

2 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும்

 விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியது: விருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் தென்னை மரங்கள் பட்டுப்போய் மகசூல் இழப்பும் ஏற்பட்டுள்ளது. மரம் இருந்தாலும் காய் இருக்காது. மற்ற பயிர்களுக்கு உள்ளதைப் போல, இம் மாவட்டத்தில் தென்னைக்கும், கரும்புக்கும் பயிர்க் காப்பீடு அமல்படுத்தப்படவில்லை. காப்பீடு இல்லாததால் தென்னை விவசாயிகளுக்கு மகசூல் இழப்போடு, பெரும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு தென்னை விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மேலும், வறட்சியால் பட்டுப்போன தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close