[X] Close

கூகுளில் ‘திடீர்’ பிரபலமான மதுரை ‘தோப்பூர்’: ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையால் வந்த மவுசு


thoppur-madurai-leads-in-google-search

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Jun, 2018 10:26 am
  • அ+ அ-

மதுரை மாவட்டம் தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ அமைவதால் கூகுள் முதல் வாட்ஸ்அப்,ட்வீட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தோப்பூர் ஊர் அதிகளவு தேடப்படுவதோடு அதிகம் விவாதிக்கப்படும் பொருளாகவும் மாறியுள்ளது.

கடந்த இரு நாளுக்கு முன் வரை கூகுளில் ஆங்கிலத்தில்thoppur என்று(தோப்பூர்) டைப் செய்து தேடினால் அது, தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொப்பூரே காட்டும். இந்த தொப்பூர், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட எல்லையில் உள்ளது. இந்த இரு மாவட்டத்திற்கு இடையில் அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் மலையை குடைந்து செல்லும் கன்னியாகுமரி-பெங்களூரு நான்குவழிச்சாலையில் தொப்பூர் அமைந்துள்ளது.இப்பகுதி மிக தாழ்வாகவும்,இறக்கமாகவும் காணப்படுவதால் இங்குள்ள சவாலான வளைவுப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கும். அந்த விபத்துகளில் இப்பகுதியில் ஏராளமானோர் இறந்துள்ளனர்.அதனால், இந்த ஊரை பற்றி அடிக்கடி தினசரி பத்திரிக்கைகள்,வார இதழ்களில் செய்திகள் அடிப்படும். சமூக வலைதளங்களிலும் அதிகம் தேடப்படும்,விவாதிக்கப்படும் ஊராக தொப்பூர் இருந்து வந்தது.

தற்போது தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.அதனால், நாடு முழுவதும் உள்ள மக்கள், மதுரை மாவட்டம் தோப்பூரை அறியும் ஆவலில் அதன் அமைவிடத்தை தேடத்தொடங்கியுள்ளனர்.

அதனால்,தற்போது ஆங்கிலத்தில் தோப்பூர் என்று டைப் செய்தால் மதுரை மாவட்டம் தோப்பூரே முதலில் காட்டுகிறது.இந்த தோப்பூர்,கன்னியாகுமரி-பெங்களூரு நான்கு வழிச்சாலையில் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இருந்து6வது கி.மீ.,தொலைவில் அமைந்துள்ளது.மற்றொரு புறம் திருமங்கலத்தில் இருந்து 7வது கி.மீ.,தொலைவில் அமைந்துள்ளது.
 

இந்த ஊரில்தான் மதுரை துணைகோள் நகரம் அமைகிறது.தற்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும் அமைவதால் மதுரையின் துணை நகரமாகிறது.

பொதுவாக கூகுள் போன்ற தேடும் சமூக தேடுதல் வலைதளங்களில் அதிகமானோர் எதைத்தேடுகிறார்களோ அதுவே முதலில் வரும்.ஒரே வார்த்தை மற்றும் ஒரே பெயரில் பல ஊர்கள் அமைந்திருந்தாலும் அதில் மிகபிரபலமான,அதிகம்பேர் தேடக்கூடிய ஊரே முன்னிலைப்படுத்தப்படும். அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் பெயரிலே திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிலும் ஒரு மேட்டூர் உள்ளது. இந்த ஊரில் ரயில்வே நிலையம், பிஎட் கல்லூரி,தபால்நிலையம்,இந்த ஊரின் அருகே ராமநதி அணையும்,ஆன்மீக ஸ்தலமான தோரணமலை முருகன் கோயிலும் உள்ளது. மிக அருகில் மிகப்பெரிய சுற்றுலாத்தலமுமான குற்றாலம் உள்ளது.

அதுபோல், சேலம் மாவட்டம் மேட்டூரில் தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேட்டூர் அணை உள்ளது.கூகுளில் மேட்டூர் என்று தேடினால் சேலம் மாவட்டம் மேட்டூரே முதலில் வந்து நிற்கும்.அதுபோல், சில சமயம் அஞ்சலகங்களில் தபால் அனுப்பும்போது அம்பாசமுத்திரம் தாலுகா மேட்டூருக்கு செல்ல வேண்டிய தபால் சேலம் மாவட்டம் மேட்டூருக்கு சென்ற நிகழ்வுகள் நடந்துள்ளது.அதுபோல்,இதுவரை தர்மபுரி மாவட்டம் தொப்பூரே கூகுளிலும்,பொதுமக்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்தது.தற்போது மதுரை மாவட்டம் தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ அறிவிக்கப்பட்டதால் இந்த ஊரை தற்போது ஊடகங்கள்,கூகுள் மட்டுமில்லாது வாட்ஸ் அப், ட்வீட்டர், பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரை பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது.

‘எய்ம்ஸ்’க்கான அறிவிப்பு வந்தபிறகு தற்போது அதற்கு தாங்களே காரணம் என்று ஒவ்வொரும் கூறி வருகின்றனர்.அதை வைத்து ‘மீம்ஸ்’ கிரியேட்டர்கள் கை வண்ணத்தில் அதிகளவு ‘எய்ம்ஸ்’ மீம்ஸ்களும் வந்த வண்ணம் உள்ளது.

-ஒய்.ஆண்டனி செல்வராஜ்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close